பிரபஞ்ச படைப்பு

ஆறு நாட்களில் உலகத்தைப் படைத்தார் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம். அதன் பின் என்ன ஓய்வு பெற்று விட்டாரா? 

கடவுளுக்கு ஒருநாள் கூட விடுமுறை கிடையாது. அவர் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டால் நாம் அனைவரும் இல்லாமல் போய்விடுவோம். 

நமக்குள் ஜீவ மூச்சை யார் ஊதிவிடுவது?

மலர்களுக்கும் பறவைகளின் இறக்கைகளுக்கும் யார் நிறம் தருவது? 

சூரியனிடம் ஒளியாகவும் புல்லில் பச்சையாகவும் இருப்பது யார்? 

ஓர் இருபத்தி நான்கு மணி நேரம் அவர் விடுப்பில் போனால், ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் ஓய்வெடுத்துக் கொண்டால் எல்லாமும் முடிந்து போய்விடும். அவர் விடுப்பில் போக முடியாது. போக வேண்டியதும் இல்லை. அவர் உலகத்தை நேசிக்கிறார். அவருடைய படைப்பு . அவர் செய்து வைத்திருப்பது. அவருடைய படைப்புத் திறன். அவருடைய ஆனந்தம். அவருடைய லீலை. 

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பறவைகள் காலையில் படாமல் இருக்கின்றனவா?

ஞாயிறானால் என்ன, திங்களானால் என்ன, எந்த வித்தியாசமும் இல்லை. பறவைகள் பாடுகின்றன. மரங்கள் வளர்கின்றன. நீ மூச்சு விடுகிறாய். ஜீவிதம் எந்த இடையூறுமின்றி கொண்டாடிக் கொண்டே இருக்கிறது. 

-- ஓஷோ -- 

Credit: Jore Buddhan

More like this

Leave a Reply

Error message here!

Hide Error message here!

Forgot your password?

Hide Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close