கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரங்கள்

பொதுவாக ஒருவீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டுமென்றால், அந்த வீட்டில் உப்பு நிறைந்திருக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள். ஏனென்றால் லட்சுமி தேவி கடலில் தோன்றியவள் என்று நம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அதேபோல் உப்பும் கடலில் தோன்றக்கூடிய பொருள் என்பதால் உப்பினை லட்சுமி தேவி என்று கூறுகின்றனர். இதன் காரணமாக தான் வீட்டில் எப்பொழுதும் உப்பு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உப்பிற்கு உள்ள மகத்துவத்தைப் பற்றி பல பேர் சொல்லி, பலருக்கு பல விதமான பரிகாரங்கள் தெரிந்திருக்கும். 

அதாவது திருஷ்டி சுத்தும்போதும், மந்திரிக்கும் போதும் உப்பினை அதிகம் பயன்படுத்துவார்கள். அதேபோல் நமது பிரச்சனைகள் தீரவேண்டும் என்பதற்காக உப்பினை வாங்கி கோவில்களில் கொட்டி வேண்டுவதை கூட நம் கண்களால் பார்த்திருப்போம். அதேபோல் பாவம் தீரவேண்டும் என்பதற்கு உப்பு நிறைந்த கடல் நீரில் குளிக்கின்றோம், உப்பு ஈமச்சடங்கு செய்கின்றோம். உப்பு உணவில் மட்டுமல்ல நமது ஆன்மிக வாழ்விலும் மிக முக்கியமானது, விதையும் இல்லாமல் மண்ணும் இல்லாமல் கடலில் தோன்றும் இந்த அதிசய விளைச்சலை, வியக்காத ஞானிகளே இல்லை.

இப்படிப்பட்ட சக்திவாய்ந்த கல் உப்பினை பயன்படுத்தி நமக்கு நன்மை தரும் 7 கல் உப்பு பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோமா? கேட்டது கிடைக்கும் உப்பு பரிகாரம்..! 

1. டம்ளர் நீரில் கல் உப்பு பரிகாரம்: ஒரு சுத்தமான டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் கல் உப்பினை சேர்க்க வேண்டும். இவற்றை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதினால் வீட்டில் இருக்கும் தீயசக்திகளை நீங்கி வீட்டில் நன்மைகளை பெருக்க செய்யும். இந்த பரிகாரத்தை தினமும் செய்து வர வீட்டில் பணக்கஷ்டங்கள் நீங்கி, நம் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த முறையை தினமும் செய்வதாக இருந்தால் தினமும் டம்ளரில் புதிய நீரை மாற்றி செய்ய வேண்டும்.பழைய நீரினை ஓடும் நீரில் ஊற்றிவிட வேண்டும். 

2. கணவன் மனைவி பிரச்சனைகள் தீர கல் உப்பு பரிகாரம்: பொதுவாக கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள், மனவருத்தங்கள் ஏற்படும்பொழுது ஒரு கிண்ணத்தில் கல் உப்பினை எடுத்து அவர்கள் பெட்ரூமில் ஒரு ஓரத்தில் வைத்தால். அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகள், மனவருத்தங்கள் நீங்கி விரைவில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். 

3. குளியலறை கல் உப்பு பரிகாரம்: ஒரு சுத்தமான பவுலில் கல் உப்பினை நிரப்பி தங்களின் குளியல் அறையில் தண்ணீர் படாத இடத்தில் வைக்க வேண்டும். நாளுக்கு நாள் அந்த உப்பு கரைய ஆரம்பிக்கும் எனவே அப்போதெல்லாம் அந்த கிண்ணத்தில் உப்பினை நிரப்ப வேண்டும். இவ்வாறு இந்த பரிகாரத்தை செய்வதினால் அவர்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்ட்டி மற்றும் தரித்திரம் நீங்கும். 

4. கல் உப்பு குளியல் பரிகாரம்: குளிக்கும் நீரில் சிறிதளவு கல் உப்பினை சேர்த்து குளித்தால் நம்மை அண்டி இருக்கும் கெட்டசத்திகள் அனைத்தும் விலகும். மேலும் திருஷ்டியால் ஏற்படும் உடல் சோர்வு, உடல் வலி, உடல் அசதி அனைத்தும் நீங்கும். மேலும் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மைகள் நீங்க உப்பு குளியல் மிகவும் சிறந்தது. 

5. வீட்டை சுத்தம் செய்யும் கல் உப்பு பரிகாரம்:வாரத்தில் ஒரு முறை வீட்டை கழுவி சுத்தம் செய்யும்பொழுது அதன் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பினை சேர்த்து கரைத்து வீட்டை கழுவி சுத்தம் செய்து வந்தால், வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள், தீய சக்திகள் நீங்கி. வீட்டில் நேர்மறை சக்திகள் உருவாக்கி நிறைய நன்மைகள் நிகழும். 

6. வாளி நீரில் கல் உப்பு பரிகாரம்:நம்மை தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது இது போன்ற உச்சகட்ட உணர்ச்சிகள், மன அழுத்தம், திருஷ்ட்டியால் ஏற்படும் கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் போன்ற துன்பங்கள் துரத்தும் போது, வாளியில் சிறிதளவு நீர் ஊற்றி, அவற்றில் ஒரு பாக்கெட் கல் உப்பு கொட்டி, கால்களை அவற்றில் வைத்து சிறிது நேரம் நாற்காலியில் கண்களை மூடி அமருங்கள். பின் என் மனதில், உடலில் உள்ள எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள். 

7. கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்: பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இரண்டு கைகளிலும் உப்பினை வைத்து கொண்டு கிழக்கு திசை நோக்கி அமருங்கள். பின் தங்கள் மடியில் ஒரு வெள்ளை காகிதத்தை வைத்து கொள்ளுங்கள். கைகளை தொடைமீது வைத்து, உள்ளங்கை மேல் நோக்கி இருக்கவேண்டும். பின் கைகளை உப்புடன் இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். பின் தங்கள் மனதுக்குள் இருக்கும் வேண்டுதலை மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டு 15 நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும். பின் இந்த உப்பினை ஓடும் நீரில் போட்டுவிடுங்கள். இந்த முறையை 2 வாரங்கள் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதனால் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். 

Credit: சித்தர்களின் குரல் 

More like this

Leave a Reply

Error message here!

Hide Error message here!

Forgot your password?

Hide Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close