சனியின் கர்ம பலனுக்கு வயது வித்தியாசமில்லை, பொதுவாக முதுமை பருவத்தில் அனுபவிக்கும் கர்மமே எதார்த்தத்தில் வீரியாமாக இருக்கும்.
சனி நின்ற பாவம் சார்ந்த கர்ம பலன்களை வலுவாக கொடுக்கும்.
உதாரணமாக:
6ல் நின்ற சனி கடின உழைப்பு மற்றும் அங்கீகாரத்தை கொடுக்கும், அதே சனி 6ல் நீச்சமானால்/வலுக்குறைந்தால் அங்கீகாரத்தை கெடுக்கும்.
சனி நன்மையை செய்வாரா, தீமையை செய்வாரா என்று யோசிப்பதை விட, சனி கொடுக்கும் நன்மை/தீமையை சமமாக பாவித்து ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும், ஏனெனில் சனி நன்மை செய்தால் தீமையும் உண்டு, தீமை செய்தால் நன்மையும் நடக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
சனி நின்ற பாவம் சார்ந்த காரகங்களில் தயக்கமில்லாமல் தைரியாமாக செயல்படுங்கள் இதுவே சனி தரும் சுனக்கத்துக்கு மருந்தாகும்.
வாழ்க்கையில் யாருமே என்னை கவனிக்கவில்லை என்று செய்யும் தவறுகள் அனைத்தும் சனியால் கவனிக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள், அப்போது தவறு செய்ய வைப்பதும் சனியே, தவறுக்கு ஏற்ற தண்டனையை அனுபவிக்க வைப்பதும் சனியே என்பதை புரிந்துகொள்ளலாம்.
உங்கள் ஜாதகத்தில் சனி எந்த பாவத்தில் எந்த கிரகத்துடன் இணைந்து உள்ளதோ அதன் உயிர்காரக உறவிடம் தாழ்ந்து அல்லது விட்டுக்கொடுத்து செல்லுங்கள் சனியின் சோதனை குறையும்.
உதாரணமாக:
7ல் சனி நின்றவர் தன் வாழ்க்கைத்துணையிடம் தாழ்ந்து/விட்டுக்கொடுத்து போகவேண்டும்.
2ல் சனி நின்றவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.