புதன் பலவீனமாக இருந்தால் செயலில் நிலைத்தன்மை இருக்காது, எந்த வேலையும் முழுமையடையாது, எதையும் முன்கூட்டியே சிந்திக்கும் ஆற்றல் பாதிக்கப்படும், எப்போதும் எதாவது ஒரு எதிர்மறை சிந்தனை ஜாதகரை சஞ்சலப்படுத்தும்..!
புதன் ராகு/கேது/சனியுடன் 8 டிகிரிக்குள் இணையும் போது தன்னுடைய தனித்துவத்தை இழப்பார்..!
சூரியனுடன் இணைந்த புதன் சில நிலைகளில் ஜாதகருக்கு தெளிவான சிந்தனைகளையும் உடல் சூட்டையும் கொடுப்பார்..!
புதன்+செவ்வாய் இணைவு தோல் அல்லது நரம்பு சம்பந்தமான வியாதியை கொடுத்துவிடுகிறது..!
புதன் நீச்சமடைந்தவர்களின் பேச்சும் செயலும் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாக இருக்கும், எதையும் தலை கீழாக அணுகும் திறன் இவர்களுக்கு உண்டு, அதிக கற்றறிவு மற்றும் பட்டறிவு இருந்தும் வாழ்க்கையில் தனக்கு அதனால் எந்த பயனும் இல்லையே என்கிற ஏக்கம் இவர்களுக்கு அதிகம் இருக்கும், மற்றவர்களுக்கு முன்னின்று உதவுபவர்கள் புதன் நீச்சம் பெற்றவர்களே.