சூரியனிடம் எதையும் தாங்கும் ஆத்ம பலத்தை வேண்டு.
சந்திரனிடம் தெளிவான மனோநிலையும், ஆரோக்கியமான உடலையும் வேண்டு.
செவ்வாயிடம் தைரியத்தையும், கட்டுக்கோப்பான தேக பலத்தையும் வேண்டுங்கள்.
புதனிடம் நல்ல அறிவாற்றலையும், சிந்தனையும் வேண்டுங்கள்.
குருவிடம் வாழ்க்கைப்பற்றிய புரிதலையும், ஆன்மீக ஆற்றலையும் வேண்டலாம்.
சுக்கிரனிடம் சுகமான வாழ்க்கை நிலையையும், நல்ல பொருளாதார நிலையையும் வேண்டு.
சனியிடம் சிக்கல்கள் இல்லாத ஆயுளையும், சுணக்கமில்லாத ஜீவனத்தையும் வேண்டு.
ராகுவிடம் உயர்ந்த குறிக்கோள்களை பற்றிக்கொள்ள வேண்டலாம்.
கேதுவிடம் வாழ்க்கையில் அவசியமானது, அவசியமற்றது எவை என்பதை விழிப்புணர்வு செய்யவும், எந்த சூழ்நிலைக்கும் அடிமையாகாத பற்றில்லா வாழ்க்கையையும் வேண்டலாம்.
சூரியனிடம் சமர்ப்பிக்க வேண்டிய கோரிக்கைகளை ஈசனிடமும். சந்திரனின் வேண்டுதலை சக்தியிடமும். செவ்வாயின் வேண்டுதலை முருகனிடமும். புதன் சார்ந்த வேண்டுதலை விஷ்ணுவிடமும். குருவுக்கான வேண்டுதலை பிரம்மனிடமும். சுக்கிரனின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க மஹாலக்ஷ்மியிடமும். சனியிடம் முறையிட பிரம்மா மற்றும் சாஸ்தாவிடமும். ராகுவுக்கான வேண்டுதலை காளி அல்லது துர்கையிடமும். கேதுவை பணிய விநாயகர் மற்றும் வாராஹியிடமும் முறையிடவேண்டும். கோயிலில் நவகிரகங்களை காணும்பொழுது அதன் பரிகார தேவதைகளை நினைத்து வேண்டுவதே உத்தமம்.
Credit: Karthick Subramanyam