ஆறாம் பாவம் பலன்களை மிகவும் கவனமாக ஆராய்ந்து இணைக்க வேண்டும். ஒருவர் நல்லவரா, கெட்டவரா, நோயாளியா, கடன்காரனா, வம்பு, வழக்கால் பாதிப்படைபவரா, ஒற்றுமையாக வாழ்பவரா, குடிப்பவரா, நடத்தை கெட்டவரா, பல பெண்கள் தொடர்புடைபவரா, இரண்டுதாரம் அடைபவரா, காதல் திருமணமா? ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்பவரா, சிறைச் செல்பவரா, விபத்தால் பாதிப்படைபவரா, இருக்கும் சொத்தை இழப்பவரா - இப்படியான எல்லா கேள்விக்கும் பதிலை ஆறாம் பாவம் தெளிவாக எடுத்துச் சொல்லி விடும், எனவே ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் ஆறாம் பாவத்தின் நிலையறிந்து, அதன் திசை எப்போது நடக்கும் என்ற காலமறிந்து இணைக்க வேண்டும்.
ஏனென்றால் இல்லறவாழ்க்கையின் தோல்விக்கும்,பிரிவினை,விவாக ரத்து, போன்ற நிலைக்கு இந்த ஆறாம் பாவத்தாலே. ஆறாம் அதிபதி ஏழில் அமர்ந்தால் வாழ்க்கைத்துணை நோயாளியாவார், அவரால் கடன்பட நேரிடும், அவரோடு வம்பு வழக்கு ஏற்பட்டு காலம் செல்லும், வாழ்வில் வெறுப்பு, ஏழாம் அதிபதி 6ல் அமர்ந்தால பிரிவு, விவாகரத்து, மரணம், ஓடிப்போதல், துணையை கொல்லவும் மனம் துணியும், ஏழாம் அதிபதியை ஆறாம் அதிபதி பார்த்தால் ஓடிப்போய் நாசமாதல். ஏழும் ஆறும் இணைந்தாலும் இதே பலன்தரும்.
6ம் அதிபதி லக்னத்தில் அமர்ந்தால் நோயாளி, கடன்காரன், கெட்ட நடத்தை உள்ளவன், சேடிஸ்ட்.
லக்னாதிபதி 6ல் அமர போராட்டமான வாழ்க்கை, வெளியூர் வாழ்க்கை.
6ம் அதிபதி இரண்டில் இருந்தால் ஊதாரி, செலவாளி, சீட்டாட்டம், ரேஸ் என பணத்தை அழிப்பான், சண்டைக்காரன், குடும்ப பொறுப்பற்றவன்.
இரண்டுக்குடையவன் 6 ல் மறைய பிச்சைக்காரன், தரித்திரவான்.
3ம் அதிபதி 6 ல் மறைய இளைய சகோதரம் இல்லை, தைரியம் போகும், தன்னம்பிக்கை போய்விடும்.
3ல் 6ம் அதிபதி அமர இளைய உடன்பிறப்பு பகை, ஆண்மைக்குறைவு தரும்.
4ல் 6ம் அதிபதி அமர சொந்த வீடு இல்லை, கடன் வீட்டின் மீது, எப்போதும் வீடு போர்க்களமாகும், நெஞ்சக நோய் வரும், தாயால் குடும்பம் பகை, வாகன இழப்பு.
4ம் அதிபதி 6ல் அமர, தாய் பிரிவு, குடும்பம் பிரிவு, வாகன விபத்து, கடனுக்கு வீடு போகும், வாகனமும் பொகும், நிம்மதி பறிபோகும்.
6ம் அதிபதி 5 ல் அமர, குழந்தை பாக்யம் தடை, மருத்துவத்தில் குழந்தை பெறல், தத்து எடுத்தல், பிள்ளையால் தொல்லை.
5 ம் அதிபதி 6ல் அமர்ந்தால் குழந்தையை இழத்தல், குலதெய்வ சாபம், மாமன், பாட்டன் பகை.
6ம் அதிபதி 7 ல் அமர்ந்தால், திருமணம் தடைபட்டுக்கொண்டே செல்லும், திருமணத்தில் தகராறு ஏற்படும், மணமேடையில் கூட பிரச்னை வரும், கள்ளக்காதல் ஏற்படும், கடன், நோய், பகையால் பாதிப்பு தரும்.
7ம் அதிபதி 6ல் இருந்தால் திருமணத்திற்கு பிறகு விவாகரத்து ஏற்படும், வேறு ஒருவரோடு ஓடிப்போகலாம், விபத்தில் மரணம் நேரலாம், இரண்டாவது வாழ்க்கை அமையலாம்.
6ம் அதிபதி 8 ல் மறைய, அடிவயிறு, ஆசனவாய், கருப்பை, மர்ம உறுப்புகளில் நோய் வரலாம்.
8ம் அதிபதி 6 ல் அமர, சிசேரியன், வயிற்றில் கட்டி, அல்சர் போன்ற பாதிப்பு தரலாம்.
6ம் அதிபதி 9ல் இருக்க தந்தையுடன் பகை, பூர்வீக சொத்து கிடைக்காது, சொத்தில் உரிமை கேட்டு கேஸ் போடுவார்.
6ம் அதிபதி 10ல் இருக்க மருத்துவம், காவல், சட்டத்துறை, விளையாட்டுத்துறை ஒன்றில் வேலை, கடினமான பணி.
10ம் அதிபதி 6ல் இருக்க, வெளிநாட்டு வேலை, ராணுவத்தில் வேலை, சொந்தத் தொழிலால் கடன் ஏற்படல், வேலை இழப்பு, தொழிலில் ஏமாற்றம்.
6ம் அதிபதி 11 ல் இருந்தால் அதிக கடன், வைத்தியச் செலவு, கோர்ட் கேசால் இழப்பு, மூத்த உடன் பிறப்பு பகை, இளைய தாரம் ஏற்படும்.
11ம் அதிபதி 6 ல் இருந்தால் தரித்திர யோகம்.
6ம் அதிபதி 12 ல் இருக்க, கடன், பகை இல்லை.12ம் அதிபதி 6ல் இருக்க தூக்கம் குறைவு, தாம்பத்ய சுகம் குறைவு, விபத்தால் செலவு உண்டு.
இதன் மூலம் ஆறாம் பாவம் என்ன செய்யும் என அறிந்துக் கொண்டீர்கள், 6ம் அதிபதியோடு பாவக்கிரகமான ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் சேர பாதிப்பு அதிகம். சுப கிரகம் 6 ம் அதிபதியை நோக்க பரிகாரம் உண்டு. மீண்டு விடலாம். இது போன்ற ஆறாம் பாவத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகங்களை இணைக்கும் போது மிகவும் கவனம் எடுத்து இந்த பாதிப்புகள் நீங்கும் வண்ணம், அடுத்தவரின் பாவக வலிமையை, கிரக வலிமையை கணக்கில் கொண்டும், திசாக்களின் நிலையறிந்தும் இணைக்க வேண்டும்.
உதாரணமாக: பெண் ஜாதகத்தில் 6ம் அதிபதி 7ல் இருந்தால் கணவனுக்கு பிணியைத் தருமாதலால் அவனுக்கு ஆறாம் பாவம் ஆட்சி, உச்சம் பெற்றுள்ளபடி இணைத்தால் பெண் ஜாதகம் தரும் நோய் அவனை பாதிக்காது. கனவன் மருத்துவனாகவோ, போலீசாகவோ, வக்கீலாகவோ உள்ள ஒருவனை கணவனாக இணைத்தால் பெண் ஜாதகம் தரும் கடன், வம்பு வழக்கு அவனை பாதிக்காது அல்லது அவனுக்கு 6ல் ஒரு பாவக்கிரகம் உள்ளபடியும் இணைக்கலாம்.
Credit: A.v.ஜோதிட ஆலோசனை