ஒரு ஜாதகத்தில் திருமணம் நடக்குமா, நடக்காதா என்பதை பார்ப்பதற்கு முன்னர் இரண்டாம் பாவம் எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
- குடும்பம் அமையும் அமைப்பு என்பது ஜாதகருக்கு இருக்கிறதா என்று பார்த்த பிறகுதான் திருமணத்தைப் பற்றிய முடிவு செய்ய வேண்டும்.
- முதல் திருமணம், இரண்டாவது திருமணம் என அடுத்தடுத்து திருமணங்களை 7, 11 என அடுக்கிக் கொண்டே போனாலும் குடும்பத்தை பார்ப்பதற்கு இரண்டாம் பாவகத்தை பார்க்க வேண்டும்.
- இரண்டில் சனி செவ்வாய் ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு, இந்த நிலையில் இரண்டாம் அதிபதி என்ன நிலையில் இருக்கிறார் என பார்க்கவேண்டும், இரண்டாம் வீடு மட்டும் பாவத்துவமாகி அதிபதி (House owner)நல்ல நிலையில் இருந்தாலும் குடும்பம் அமையும்.
- பொது களத்திர காரகனான சுக்கிரன், ராகு உடன் கிரகணம் பட்டு தசா வே நடைமுறைக்கு வந்தாலும் கூட இரண்டை பார்த்து குடும்பத்தை முடிவு செய்யலாம்.
- இரண்டாம் வீட்டை குரு பார்த்து அல்லது வேறு சுபகிரகங்கள் பார்வை செய்து இரண்டாம் அதிபதி பாவத்துவமான அமைப்பில், தினம் தினம் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் கூட குடும்பம் பிரியாது.
- மொத்தத்தில் ஏழு பதினொன்று விட இரண்டாம் பாவகமே ஒரு ஜாதகருக்கு மிக முக்கியமானது. எத்தனை திருமணம் செய்து கொண்டாலும் குடும்பம் என்பது நல்லபடியாக அமைந்தால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும்.