ஜோதிட சாஸ்திரம் பற்றி அறிந்தவர்கள் அனைவர்க்கும் கீரனுர் நடராஜனார் எழுதிய 'ஜாதக அலங்காரம்' பற்றித் தெரியாமல் இருக்காது. அதுபோன்ற ஒப்பற்ற ஒரு நூல்தான் தில்லைநாயகப் புலவரால் இயற்றப்பட்ட இந்த 'ஜாதக சிந்தாமணி'. இது ஒரு பெரு நூல் என்றே போற்றப் படுகிறது. பல எடுத்துக்காட்டுகளோடு, தெளிந்த நீரோடை போன்ற விளக்கமான உரையை உரையாசிரியர் திரு. தேவசேனாதிபதி அவர்கள் உங்கள் பொருட்டு இந் நூலுள் வழங்கியிருக்கிறார். முதலில் நூலைப் படியுங்கள். பிறகு அவசியம் பாராட்டுங்கள். ஜோதிடம் கற்போருக்கும், கற்றோருக்கும் இந் நூல் ஒரு கைவிளக்காக அமையும் என்பது திண்ணம்.