திருவாதிரை நட்சத்திர வடிவம் என்பது நீர்த்துளி ஆகும். நீர்த்துளி போன்றது ஸ்படிகமாகும். இதன் காரணமாகவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஆதிசங்கரர் தனது கரத்தால் ராமேஸ்வரத்தில் ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை செய்தார்.
ஸ்படிகம் பதித்த மோதிரம் அணிவது கூட இந்த நட்சத்திர நபர்களுக்கு நற்பலன்கள் தரும். இந்த ஸ்படிகம் மாலையாக கழுத்திலோ அல்லது ஸ்படிகம் பதித்த மோதிரமாக கீழ்க்கண்ட நட்சத்திர நபர்கள் பலரும் காணும்படி வலது கரத்தில் மோதிர விரலில் அணிந்து வருவது மிகுந்த நன்மை தரும்.மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, சுவாதி, விசாகம், அவிட்டம், சதயம், பூரட்டாதி
Credit: மணிகண்டன் பாரதிதாசன்