நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது, பொட்டல் கிராமம். இங்கே உணவுக்காக வனவிலங்குகள் அடிக்கடி கீழே இறங்குவது வழக்கம். அதே போன்று இன்று காலையில் ஒரு ஆண் யானை உணவுக்காக கீழே வந்துள்ளது. பனைமரத்தில் உள்ள பனம்பழம் வாசத்தை நுகர்ந்த யானை அதனை பறிக்க மரத்தை வேரோடு சாய்க்க முயன்றபோது எதிர்பாராத விதமாக பனை மரம் அருகே உள்ள மின்சார கம்பி மீது சாய்ந்தது. யானை மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக உயிரிழந்ததுள்ளது.