கணபதி பேருந்து இப்போது உள்ள மக்களுக்கு வெறும் பேருந்தாக மட்டுமே தெரியும். ஆனால் நம் பெற்றோர் காலத்தில் இந்த பேருந்து மக்களோட வாழ்க்கையோடு ஒன்றினைந்தது. அரசு பேருந்து கூட செல்லாத பல குக்கிராமங்களுக்கும் இந்த பேருந்து சென்று பயணிகளை ஏற்றி வந்தது.
அந்த காலத்துல ஒரு ஊர்ல இருந்து மற்றோரு ஊருக்கு ஏதாவது பொருள் அனுப்பனும்னா இந்த பேருந்தில் கொடுத்து விடுறது தான் வழக்கம் (இப்ப கொரியர்ல மிஸ் ஆகுற மாதிரிலாம் ஆகாது எவ்வளவு விலை உயர்ந்த பொருளையும் நம்பி அனுப்புவார்கள்)
இந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு பேருந்தில் பயணிக்கும் அனைவரின் பெயருமே தெரிந்திருக்கும், அந்த அளவுக்கு சொந்த பந்தம் போல பழகியிருப்பார்கள்.
வயல்ல வேலை செய்றவங்க கரை ஏறனும்னா கடிகாரத்தைலாம் பார்ப்பது இல்ல, கணபதி பேருந்து போய் வர நேரத்த வச்சி தான் கரை ஏறுவாங்க. அந்த கடிகாரம் கூட நேரம் தவறும், ஆனால் கணபதி பேருந்து சரியான நேரத்திற்கு வந்து நிற்கும்.
credit: Tirunelveli Pasanga La