பெரியாழ்வார் பாடுகிறார்,
சிறுவனென்று எண்ணாதே என் சீரிய இளஞ்சிங்கத்தை என்று. ஆம் அவர் கூறியது போலவே கண்ணபிரான் பலரின் கர்வத்தை அடக்கினான். அதை அனுபவிப்போம்,
1. காளிங்கன் யமுனையில் இருந்து கொண்டு அனைவருக்கும் துன்பத்தை விளைவித்தான். கண்ணபிரானோ அவனது கொட்டத்தை அடக்கி உயிர் பிச்சை தந்தான்.
2. இந்திரன் ஏழு நாட்கள் மழை பொழிந்தான். கண்ணபிரான் கோவர்த்தன கிரியை தமது சுண்டு விரலால் தாங்கி இந்திரனின் கர்வத்தை அடக்கினான் பிறகு இந்திரன் மன்னிப்பு கேட்டு இந்திர லோகம் சென்றான்.
3. பிரம்மா தமது மாயையால் கண்ணபிரானின் நண்பர்கள், மாடுகள், தளவாட பொருட்கள் அனைத்தையும் மறைத்து வைத்தான். ஆனால் கண்ணபிரானோ தமது மாயையால் அனைத்தும் தானாகி ஒன்றும் அறியாதது போல ஒரு வருட காலம் வாழ்ந்தான். இதை கண்டு அவமானபட்ட பிரம்மன் கர்வம் ஒழிந்து மன்னிப்பு கேட்டு தம் லோகம் சென்றார்.
4. சிவனோ பாணசுரனுக்கு உற்ற நண்பனாக விளங்கி அவனுக்கு வரமும் அளித்தான். ஆயிரம் கரங்கள் தந்து எம்மை வெற்றி பெற்ற பின்னர் தான் உம்மிடம் ஒருவன் போர் செய்ய இயலும் என்று அந்த வரத்தின் படியே சிவனை வெற்றி பெற்று அவரின் கர்வத்தை அழித்து பாணாசுரனின் ஆயிரம் கரங்களையும் அறுத்து எறிந்தான். பின்னர் சிவனுக்காக பாணசுரனுக்கு உயிர் பிச்சை அளித்தான்.