ஏழு கல்பங்கள் ஆயுள் உள்ளவரும் எல்லா சந்தேகங்களையும் போக்குவருமான மார்கண்டேய முனிவர் வந்தார். எல்லா முனிவர்களும் அவரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினர். முக்காலமும் உணர்ந்த அவர் முனிவர்களின் சந்தேகத்தை உணர்ந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தார், வசிஷ்டரின் அருகில் இருந்த ஏழு வயதுள்ள பராசரை பார்த்து வணங்கினார் மார்க்கண்டேயர். தம்மை பார்த்து வணங்கியதை கண்ட பராசரர் பயந்து எழுந்திருக்க, மார்கண்டேயரோ அதிக வயதுடைய நீதான் வணங்கத்தக்கவன் என்று ஏழு வயதுள்ள பராசரை பார்த்து சொன்னார். பராசரர் இதென்ன பரிகாசம் ஏழு கல்பமாக ஜீவிக்கும் தாங்கள் எங்கே, ஏழு வயதுள்ள நானெங்கே என்றார். உடனே மார்கெண்டேயர் ஆயுளை எப்படி கணக்கிடுவது என்று உரைக்கிறேன் அனைவரும் கேளுங்கள் என்றார்.
ப்ராணிகள் எவ்வளவு க்ஷணங்கள் விஷ்ணுவின் நாம ஸ்மரணத்தில் ஆயுளை கழிக்கின்றனரோ அவைகளை மாத்திரத்தில் கூட்டி ஆயுளை கணக்கிட வேண்டும். எவ்விதம் பதரை நீக்கி தானியங்களை சேர்போமோ அது போல பராசரர் ஒரு க்ஷணம் கூட ஹரி நாமத்தை ஸ்மரிக்காமல் இருப்பதில்லை. (விஷ்ணு த்யானம்) சோம்பேறிகளான எங்களுடைய ஸ்மரணத்தினால் பயனுள்ள காலம் ஐந்து வருடங்கள் கூட மிஞ்சாது என்றார்.
நாமமே பலம். நாமமே சாதனம். ராம கிருஷ்ண ஹரி. பாண்டுரங்க ஹரி.
credit: Vittal Saravanan