பகவான் ஶ்ரீ இராமசந்திர மூர்த்தியின் நல்லாட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் அரசவையில் தம்பி இலக்ஷ்மணனிடம் அரண்மனை வாயிலுக்கு சென்று விண்ணப்பத்துடன் வந்தவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். இலக்ஷ்மணன் சீக்கிரமே திரும்பி வந்தான் "பிரபு கோசல நாட்டில் அவ்வாறு குறையுடன் யாரும் இருப்பதாக தெரியவில்லை என்றான். ஆனால் பகவான் ஶ்ரீ இராமர் மறுபடியும் இலக்ஷ்மணனை சென்று நன்றாக கவனித்து வரும்படி வற்புறுத்தி அனுப்பினார். சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் நான் பழிக்கு ஆளாக விரும்பவில்லை. நாட்டில் தார்மீகம் சீர் குலைவதை கவனிக்காமல் இருக்க கூடாது.இச்சமயம் இலக்ஷ்மணன் அரண்மனை வாசலில் ஒரு நாய் தலையில் காயம் ஏற்பட்டதால் இரத்தம் வழிய உட்கார்ந்திருந்ததை கண்டான்.
லக்ஷமணன் தன்னை உற்றுநோக்குவதை கவனித்த நாய் முனகியது. என்ன விஷயம்" என்று இலக்குமணன் கேட்டான். "இங்கு எதற்காக வந்தாய் பயப்படாமல் கூறு" என்றான். நாய், "துயரமுற்றவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவனும் பாதகமலங்களில் அடைக்கலம் அடைந்தவர்க்கு அபயத்தை அளிக்க கூடியவனுமாகிய பகவான் ஸ்ரீ இராமனிடம் நான் நேரிடையாக பேச விரும்புகிறேன்" என்று பதில் கூறியது. இலச்சுமணன் "நீ சொல்ல வேண்டியதை உள்ளே வந்து அரசனை சந்தித்து விஷயத்தை நேரிடையாக சொல்லலாம் என்றான். ஆனால் நாய்: அதமமான யோனியில் பிறந்த ஜீவன் தான். அதனால் கோவில், பிராமணர் வீடு அரச மாளிகைகள் போன்றவற்றுள் பிரவேசிக்க தகுதியற்றவன் சாஸ்திரத்தின் மறு உருவம் அரசன் 'தேவர்களின் பிரதிநிதி, உயிரினங்களின் நன்மையை கருதுபவன். அப்படிப்பட்ட அரசரின் கட்டளையின்றி எனக்கு ஶ்ரீ இராமசந்திரன் முன் வர தைரியம் இல்லை " என்று பதிலளித்து.
இலக்ஷ்மணன் உள்ளே சென்று விஷயத்தை ஶ்ரீ இராமரிடம் கூறினான் இராமர் உடனே "யாராவது சென்று தாமதமின்றி அந்நாயை அழைத்து வரவும்" என்று கட்டளையிட்டார். நாய் தாழ்மையுடன் பகவான் ஶ்ரீ இராமசந்திரன் முன் வந்து- பிரபு அரசன் பகவானுடைய பிரதிநிதி ஆகையால் உயிரினங்களை காப்பாற்றும் கடமை அவருக்கு உண்டு மற்றவர்கள் நிம்மதியுடன் தூங்கும் பொழுது அரசன் கவனமாக இருப்பான். சகல ஜீவன்களின் நன்மைக்காக 'வாழ்கிறான் ஆனால் அதே சமயம் எல்லா சிருஷ்டியும் அவன் மேல் சார்ந்திருப்பதால் அவன் அவர்களை தவிர்ப்பதால் பிரஜைகள் அழிகின்றன. அரசன் சாஸ்திரத்தை தாங்குபவன் அதனால் தீமைகளின் தீவிரத்தை அடக்குகிறான். சாஸ்திரத்தை கையாளுபவன் வாழ்க்கையில் சந்தோஷமடைகிறான். அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ந்து வாழ்கிறான். இந்த காரணத்தால் அரசன் தர்மத்தை தாங்கும் உயர்ந்த மதிப்பை பெறுகிறான்.
ஶ்ரீ இராமா ! ஓ பிரபு நீர் ஒரு தர்மாத்மாவாகையால் உம்முடைய பாதகமலங்களில் தலைவணங்கி உம் கருணையை யாசிக்கிறேன். நான் சொல்வதை கேட்டு கோபம் கொள்ளக்கூடாது" என்று கூறியது. ஶ்ரீ இராமன் அதனை ஊக்கம் அளித்து "பயமில்லாமல் பேசலாம்" என்று கூறினார் ஊக்கம் அடைந்த நாய்"ஒரு 'சர்வார்த்த சித்தன் என்ற பிராமண பிச்சைக்காரன் ஒருவன் காரணமின்றி என் தலையை காயப்படுத்தினான்" என்று கூறியது. உடனே பகவான் ஶ்ரீ இராமரின் ஆட்கள் சென்று 'சர்வார்த்த சித்தனை அழைத்து வந்தனர். இராமன் தன் முன்னிலையில் நிற்கும் பிராமணனை நோக்கி. ஏன் நாயை காயப்படுத்தினாய் அது என்ன குற்றம் செய்தது சினம் மனிதனின் பயங்கரமான எதிரி. இது ஒரு கூர்மையான வாளுக்கு ஈடானது நொடியில் நேர்மையை வெட்டித் தள்ளிவிடும். கோபம் ஒருவனுடைய நெடு நாள் செய்த தவத்தின் பலனை பலனில்லாமல் செய்துவிடும். அதனால் புத்திசாலிகள் சினத்தை எண்ணங்களிலிருந்து வாக்கினிலிருந்தும் செயல்களிலிருந்தும் நீக்கிக்கொள்வார்கள்.
ஒருவன் கஷ்டப்பட்டு தன் உண்மையான குணத்தை இரகசியமாக மறைத்தாலும், நாளடைவில் அவன் இயற்கை குணம் வெளிப்பட்டுவிடும் ஜெயிக்காதவனுடைய தீய செயல்களே உபதேசித்தான் காம் குரோத லோபங்களே அவனை காட்டிவிடும்" என்று உபதேசித்தார். பிராமணன் நான் பிச்சையெடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தேன். வழியில் இந்த நாய் பாதையில் குறுக்காக படுத்திருந்து என் வழியை மறைத்தது. வழி விடும்படி கூறவும் இது மிகவும் மெதுவாக எழுந்தது நான் தடியால் இதன் தலையில் தட்டினேன். நான் கடும் பட்டினியுடன் இருந்ததால் கோபம் மேலிட்டது அரசே நான் என் தவற்றை ஏற்றுக்கொள்கிறேன். இந்த வாழ்க்கையின் நரகமான பாதையிலிருந்து, நீக்கி எந்த தண்டனை எனக்கு பொருத்தமோ அதனை அளியுங்கள்" என்றான். இராமன் தன் மந்திரிகளை நோக்கி, "இவனுக்கு என்ன தண்டனை தகுந்தது? தகுந்த தண்டனை அளித்தால் தான் பிரஜைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றார்.
சாஸ்திரங்களை அறிந்த, பிருகு அஸ்ரீஷர், அங்ரீஷகர், வசிஷ்டர், கஷ்யபர் மற்றும் கூடியிருந்த ஞானிகள் :- "பிராமணனை தண்டிக்கக் கூடாது அவனுக்கு சரீரத்தை பொறுத்தவரை தண்டனை கூடாது. இதுதான் இராஜ தர்மமாகும். தாங்கள் சர்வலோகத்திற்கு நியாயாதிபதி சாக்ஷாத் பகவான் நீர் பேசுவது எல்லாம் தர்மமாகும்" என்றனர். இச்சமயம் நாய் குறுக்கிட்டு "அரசரே! தாங்கள் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று முதலில் கேட்டதால் கூறுகிறேன், எனக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் தயவு செய்து இந்த பிராமணனை 'காலஞ்சரில்" (ஓர் இடம்) ஆசார்யனாக நியமித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டது. இதைக்கேட்ட இராமன் பிராமணனை ஆச்சார்யனாக அபிஷேகித்து பூஜிக்கப்பட்ட அந்த பிராமணனை அலங்கரிக்கப்பட்ட யானைமேல் ஆரோகணிக்கச் செய்து மிகவும் சந்தோஷத்துடன் அனுப்பினார்.
பிராமணன் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். மந்திரிகள் ஆச்சரியத்துடன் அரசே எங்களுக்கு ஒரு சந்தேகம் ஏன் அவனை வெட்கப் படும்படி செய்யாமல் அவனுக்கு உயர்ந்த பதவியை பரிசாக அளித்து இருக்கிறீர்கள்!" என்று கேட்டார்கள். ராமன் - "எந்த எந்த கர்மத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அறியமாட்டீர். ஆனால் இந்த நாய் அறியும்"அதற்குப் பிறகு இராமனே கேட்கும் பக்ஷத்தில் நாய்- "நான் என் பூர்வ ஜென்மத்தில் 'காலஞ்சர்' என்னும் இடத்தின் மடாதிபதியாக இருந்தேன் நான் தவறாமல் தேவர்களையும் பிராமணர்களையும் பூஜித்து வந்தேன். மிகவும் கவனத்துடன் என் தொண்டுகளை சிரத்தையுடன் செய்து வந்தேன் வேலையாட்களை நியாயமாக நடத்தினேன்.
இவ்வளவு அக்கரையுடனும் சிரத்தையாகவும் மேற்பார்வை செய்து ஏதோ தெரியாத குற்றத்திற்காக அடுத்த ஜென்மமாகிய இந்த ஜென்மத்தில் நாயாகப் பிறந்திருக்கிறேன். இது இவ்வாறு இருக்க இந்த பிராமணன் கோபத்தால் தர்மத்தை விட்டு ஜீவன்களை துன்புறுத்தும் காரியத்தைச் செய்தான். இந்த பிராமணன் ஆச்சர்யனாக ஏழு தலைமுறைக்கும் நரகத்தை அனுபவிப்பான். க்ரோதம் உடையவன் எவ்வாறு பிராமணர்களையும் பசுக்களையும் அர்ச்சாவதாரத்தையும் உபாசிப்பான்? அதனால் எப்பொழுதும் ஆச்சார்யரின் பதவியை ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏற்று கொள்வதைவிட வேறு தண்டனை கிடையாது" என்றது.
பிராமணர்கள், தேவர்கள், பெண்கள், சிஷ்யர்கள் முதலியவர்களின் செல்வத்தை எவன் திருடுகிறானோ தானம் செய்த பொருளை மறுபடியும் திரும்பப் பெறுகிறானோ அவன் தன்னுடைய இஷ்ட ஜனங்களுடன் நரகத்திற்குச் செல்கிறான். பிராமணர்களின் சம்பாதித்த செல்வத்தை திருட மனதால் நினைத்தாலும் நரகம்தான் பலன்" என்று கூறியது. இவ்வாறு கூறிய பிறகு திடீரென்று நாய் மறைந்துவிட்டது. எல்லோரும் ஆச்சரியத்தினால் கண்களை கொட்டாமல் நிலைத்து நின்றனர். பூர்வ ஜன்மத்தில் உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தும் இப்பிறவியில் நாயாகப் பிறக்கும் நிலை ஏற்பட்டது. அயோத்தியின் இராஜசபையை விட்டு சென்ற நாய் காசிக்கு சென்று உணவும் ஜலமும் தியாகம் செய்து தன் உயிரை விட்டது.
Credit: சுத்த பக்தி