1. பகவானை நாம் தொட்டு வணங்கலாம் மற்ற கோவில்களில் நம் மூச்சு காற்று கூட படக்கூடாது என்பார்கள்
2. இடது கையால் நெய்வேத்யம் மற்ற கோவில்களில் இது அபச்சாரம் என்பர்
3. கருவரையில் எலக்ரிக் டியூப் லைட் மற்ற கோவிலில் தீப வெளிச்சம்
4. தரிசனம் செய்தாலே முக்தி இது மற்ற கோவில் களில் சாத்தியமில்லை
5. பக்தனான சிவபெருமானை தலையிலே தாங்குகிறான் பரமாத்மா உலகில் எங்குமே சாத்தியமில்லை
6. பாகவதர்களான ஸந்த்கள் திருவடியை(கால் பாதுகை) கருவரைக்குள் எடுத்து சென்று முதல் மாரியாதை தரப்படும் மற்ற கோவில்களில் இது அபச்சாரம் ஆகும்
7. பாகவத தொண்டு செய்வதே பகவானின் பொழுது போக்கு மற்ற கோவிலில் பகவானுக்கு தொண்டு நடக்கும்
8. பாகவத்ரகள் கொண்டு செல்லும் மாலையை அப்படியே அணிந்து கொள்வான் மற்ற கோவிலில் தீர்த்தம் தெளித்தே சுத்தம் செய்து அணிவிப்பர்
9. கோவில் உள்ளேயே பாகவதர்கள் ஒருவருக்கொருவர் ஆலிங்கனம் செய்து திருவடி பணிவர் மற்ற கோவிலில் பகவானை தவிர திருவடி பணிவதில்லை
10. பாகவதர்க்கு நித்ய வஸ்துவான தன்னனையே தருகிறான் பகவான் இது எங்குமே சாத்தியமில்லை
Credit: நாம ரச வைபவம்