1. “க்ருஷ்ண க்ருஷ்ணேதி ராமேதி ஸஞ்ஜபன் ஹரிதத்பர
ராஜஸூயஸஹஸ்ராணாம் பலமாப்னோதி மானவ;”
பொருள்:
க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்று ஹரிநாம கீர்த்தனம் செய்வானானால் ஆயிரம் ராஜஸூயங்கள் செய்த பலனை அடைவான் என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி கூறுகிறது.
2. விஸருதாநி பஹூன்யேவ தீர்த்தானி விவிதானி ச|
கோட்யம்ஸேனாபி துல்யானி ஹரேர்நாம ஜபேன வை
பொருள்:
கணக்கு வழக்கற்ற புண்ய தீர்த்தங்களைக் கேள்விப்படுகிறோம். அவை ஹரிநாம ஜபத்தின் மஹிமையில் கோடியில் ஒரு பங்குகூட ஆகாது என்று விச்வாமித்ர ஸ்ம்ருதி கூறுகிறது.
3. ஹரேர் நாமபரம் ஜாப்யம் த்யேயம் கேயம் நிரந்தரம்|
கீர்த்தனீயஞ்ச ஸததம் நிர்வ்ருதிம் பஹுதை சதா
பொருள்:
மோக்ஷத்தை விரும்புகிறவன், அனவரதமும் ஹரி நாமத்தையே ஜபம் செய்ய வேண்டும். ஹரி நாமத்தையே த்யானம் செய்ய வேண்டும் என்று ஜபாலி ஸ்ம்ருதி கூறுகிறது.
4. ஸர்வபாப யுதோ யஸ்து ந்ருஹரேர் நாம கீர்த்தனாத்
விமுச்ய ஸர்வதுர்காணி யாதி ப்ரும்ம ஸனாதனம்
பொருள்:
ஸகல பாபங்களையும் செய்தவனாயினும் நரஸிம்ம நாமத்தைக் கீர்த்தனம் செய்பவன், ஸகல கஷ்டங்களையும் தாண்டி ஸனாதனமான ப்ரும்மத்தை அடைகிறான் என்று காலவ ஸ்ம்ருதி கூறுகிறது.
Credit: நாம ரச வைபவம்