1. ஜகஜ்ஜேடியே புண்டலீகன் பேட்டிக்காக பண்டரீ வந்தாய் மூக்கு நுனியில் பார்வையை நிறுத்தி வாசலை நோக்கி பக்தர்களை பார்க்கிறாய்
2. ஞானேஸ்வரருக்காக குட்டி சுவற்றை தாங்கி எருமையே பேச வைத்தாய்
3. நாம தேவரின் பக்தியை கண்டு அவரோடு போஜனம் செய்து அவர் எச்சிலை உண்டாய் நாம தேவரின் நிர்மள கீர்த்தனை கேட்க நாக நாத ஸ்வாமியின் ஆலயத்தை திருப்பி வைத்தாய்
4. கபீர் தாசரின் வீட்டில் துணி நொய்தாய்
5. ஜனாபாயுடன் சேர்ந்து எந்திரத்தில் மாவைரததாய்
6. ரோகி தாசருக்காத செருப்பு தைத்தது மட்டும் இன்றி ப்ராமணர்களுகாகாக அவர் உடலுக்குள் நரம்பையே பூணுள் ஆக்கினாய்
7. ஸாவத மாலிக்காய் மண் வெட்டியை கொண்டு தோட்ட வேலை அனைத்தும் செய்தாய்
8. சோகா மேளருக்காக இறந்த மாட்டை சுமந்தாய்
9. கோர கும்பாருக்காய் பானை வளைத்து தெருவில் விற்ளாய்
10. தாமாஜிகாய் சுல்தானிடடம் பணம் கட்டி ரசீது பெற்றாய்
11. கால்கள் இல்லாத கூர்ம தாசருக்காய் உன் கால்கள் நோக நடந்து ஓடி வந்தாய்
12. சேநா நாவிதருக்காய் சுல்தானுக்கு சவரம் செய்தாய்
13. மீராவிற்காக கொடிய விஷத்தை அருந்தினாய்
14. ராம தாஸருக்காக தராசு தட்டு உயரும் வரை அரசனிடம் சொர்ணம் அளித்தாய்
15. துளசி தாசருக்காய் மாண்டு போன ஸ்தீரியின் கணவனை பிழைக்க வைத்தாய்
16. நரசிம்ம மேத்தாவின் புத்ரிகளுக்கு விவாஹ செய்ய விரைந்து வந்து நடத்தினாய்
17. ஹரி சங்கர ரூபம் தரித்து நரஹரி சேனாரை தம்மை பூஜிக்க வைத்தாய்
18. எரியும் நெருப்பில் பூனைகளை காக்க பீதாம்பரத்தை மூலையில் வரிந்து கொண்டு கெளஸ்துப மாலையை பின் பக்கம் இழுத்து விட்டு ரட்சித்து ராக்கா கும்பரை உன வசம் ஆக்கினாய்
19. பானுதாசரிடம் ராம ராயரை அபதாரம் பட வைத்து சூலத்தால் உன் கோவில் கதவின் தாழ்பாளை உடைத்து
பண்டரி வந்தாய்
20. ஏக நாதர் பக்தியை பார்த்து பனிரெண்டு ஆண்டுகள் அவருக்கு சேவை புரிந்து தோளில் காவடி சுமந்து கோதாவரி நதியில் இருந்து தண்ணீர் சுமந்தாய் அவருக்கு சந்தனம் அரைத்து தந்தாய்
21. துக்காராம் அபங்கம் பதிமூன்று நாள் தண்ணீருக்குள் இருந்தும் அதை நனையாமல் காத்தாய்
22. மாண கோஜி போதலேக்காக அவருடைய காலியான தானிய கிடங்கை தானியம் கொண்டு நிரப்பி கஷ்டபட்டாய்
23. ஸந்தோபாவுக்காக ஆமையாக மாறி பீமா நதி கரைக்கு அப்பால் கொண்டு விட்டாய்
24. நிம்பராஜின் தோளில் மயீர் பீலிகளால் வசிறினாய்
25. விசோபாவை கடன் காரர்கள் அடைத்து வைக்க அவரின் கடனை நீ அடைத்து அவரை விடுவித்தாய்
26. கோமா பாய்காக பரிசல் ஓட்டி அவளை உம்மை சேவிக்க வைத்தாய்
27. சக்குபாய்காக ஒரு வருட காலம் அவளது கணவனுக்கும் மாமியாருக்கும் சேவை புரிந்தாய்
28. முக்தாவிற்காக இறந்த பிணங்கள் அனைத்தையும் எழுப்பினாய்
29. நீளோபாவுக்கு விடிய விடிய சமைல் செய்து அவள் மகள் திருமணத்நை நடத்தி வைத்தாய்
30. இந்திரன் சாபத்தை போக்கி அந்த செங்கல் மேல் நின்று கொண்டு இருக்கிறாய்
இப்படி உனக்கு அனேக பக்தர்கள் இருக்கிறார்கள் எமது புத்திக்கு எட்டாது அவர்களை கணக்கெடுப்பதற்கு உலகில் ஏராளமான வருடம் உள்ளது அதை யாரால் கணக்கிட முடியும் உன் தயாள குணத்தை எவரால் தான் வர்ணிக்க இயலும்
நாமமே பலம் நாமமே சாதனம். ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி.
Credit: Vittal Saravanan