ஹே ப்ராண நாதா, பரமேஸ்வரா, தாங்கள் ஸதா ராம நாமத்தை உஜ்ஜீவனம் செய்து கொண்டு உள்ளீர்கள். கலியுகத்தில் மானுடர்கள் எப்படி மோட்சம் அடைவர், கலியின் கோரம் பொல்லாதது அல்லவா. ஜகன் மாதாவாக, அவர்கள் அடைய போகும் துன்பத்தை என்னால் தாங்க இயலாது. தாங்கள் தான் அதற்கு ஒரு வழியை காண்பிக்க வேண்டும்.
எனது அன்புக்குரிய உமையவளே. கலி புருசனால், கலியுகத்தில் மானுடர் பாவத்திற்கு மேல் பாவம் செய்ய உந்தப்படுவர். ஆனால் அவர்கள் மிக சிரமப்பட வேண்டியது இல்லை. முக்தி அடைய அதற்கு ஒரு எளிய உபாயம் உள்ளது. அது என்னவென்றால், ராம கிருஷ்ண ஹரி என்ற திருநாமத்தை சொன்னால் போதும். ஆகையால் ஜீவன்களை கண்டு வருந்தாதே, அவர்கள் ஹரியின் இலக்கிற்கு பாத்திரமானவர்கள் ஆவர்.
கைலாயத்தில் பரமசிவன், பார்வதி உரையாடலை குளத்தில் இருந்து மச்சமுனி கேட்டு அந்த மந்திரம் சகலருக்கும் பூமியில் ஞானேஸ்வரர் வழியாக பரப்பப்பட்டது.
Credit: நாம ரச வைபவம்