பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தனது நண்பரும் உதவியாளருமாகிய உத்தவருக்கு, தன் பூலோக வாழ்க்கை முடியுந்தறுவாயில், வைகுந்தம் திரும்ப திட்டமிட்டு, செயல்பட ஆரம்பித்த நேரத்தில் அருளியது, இந்த உத்தவ கீதை. ஸ்ரீமத் பாகவதத்தில் 11வது பாகத்தில் காணப்படுகிறது. ஸ்ரீமத் பாகவதமும், மகாபாரதம்போல் ஸ்ரீ வேத வியாசரால் எழுதப்பட்டது. இந்நூல் உத்தவ கீதையை ஸ்ரீமத் பகவத் கீதையுடன் ஒப்பிட்டு விளக்கமளித்துள்ளார் ஆசிரியர். இந்நூலினைப் படித்து எல்லோரும் பயன்பெற வேண்டும் என்று ஸ்ரீபகவான் கிருஷ்ணனை வேண்டுகிறோம். இந்நூலை இயற்றிய ஸ்ரீவேதவியாச மகரிஷிக்கே இந்நூலை அர்ப்பணம் செய்கிறோம்.