20 கைகள் கொண்ட சிவன் நடராஜராக. இந்த வெண்கலச் சிற்பம் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜ சிவனின் உருவத்தைக் காட்டுகிறது. தாந்த்ரீக உருவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பல ஆயுதங்கள் ஏந்திய சிவன் தாமரையின் பீடத்தில் நடனமாடும் தோரணையில் செதுக்கப்பட்டுள்ளது.
ஈசன், இரண்டு பரிவாரங்களால் சூழப்பட்டுள்ளார். அவரது பல கரங்கள் வெவ்வேறு விதமான ஆயுதங்களை ஏந்தி உள்ளன. இந்த அற்புதமான சிற்பம் தற்போது நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.