அனைத்தையும் நம்மிடம் சேர்க்கும் மந்திர மருந்து நம்மிடமே இருக்கிறது...!! அதில் முக்கிய அம்சம் – செலவே இல்லாத சிறந்த வழி இது என்பது தான்.
1975ம் ஆண்டு ஜேம்ஸ் மங்கன் என்பவர் "தி சீக்ரட் ஆப் பெர்பெக்ட் லிவிங்" என்ற தனது நூலை வெளியிட்டார்.
அது தான் "ஸ்விட்ஸ்-வோர்ட்ஸ்" (Switch Words) எனப்படும் திருப்பு வார்த்தைகள். பிரச்சினையிலிருந்து திருப்பி விடும் சக்தி வார்த்தைகளை அவர் "திருப்பும் வார்த்தைகள்" என்கிறார்!
இப்படிப்பட்ட நூறு வார்த்தைகளைத் தொகுத்திருப்பதோடு அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் அவர் கூறுகிறார்
சாவியோ பணமோ தொலைந்து போய்விட்டால், "ஐயோ, ஐயோ" என்று அலறி வீட்டை இரண்டு படுத்த வேண்டாம். (ரீச்)"REACH" என்ற வார்த்தையைத் திருப்பித் திருப்பி மனதிற்குள் அமைதியுடன் சொல்லுங்கள். சில நிமிடங்களிலே ஆழ்ந்த அமைதியுடனான மனம் தானாக சாவி கிடைக்க வழி செய்து விடும்.
வாயில் இருக்கிறது வரமாட்டேன் என்கிறது. இது ஒரு நினைவுப் பிரச்சினை. இருக்கவே இருக்கிறது -"ரீச்" என்ற வார்த்தை. தானாக உங்கள் நினைவுக்கு வர வேண்டிய வார்த்தை வந்து விடும்.
சக்தியைத் தரும் வார்த்தை-(அடை) "Reach" ஏதாவது விற்பதாக இருந்தால் நீங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை – "விற்பனை செய்" என்பதல்ல. (கொடு) "GIVE" என்பதே....
பணம் அதிகம் வர வேண்டுமா? நீங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை - (எண்ணு) "COUNT"
இறை சம்பந்தமான திவ்ய அனுபவம் பெற வேண்டுமா? இருக்கவே இருக்கிறது (தெய்வீகம்) "DIVINE" வார்த்தை...!
உறவுப் பிரச்சினையா? கவலையே வேண்டாம். (சேர்ந்திருத்தல்) "TOGETHER" என்ற வார்த்தையைத் திருப்பித் திருப்பிச் சொன்னால் போதும். இந்தத் திருப்பு வார்த்தை அணுகுமுறையை மாற்றி விடும்.
அனைத்தையும் இணைக்கின்ற பிரபஞ்ச சக்தி உங்களைச் சண்டை போடாமல் இருக்க வழி வகை செய்யும். இது போன்ற ஒற்றைச் சொல் வார்த்தை மிக சக்தி வாய்ந்தது. அனுபவத்தினால் மட்டுமே இதன் பயனைப் புரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு நீங்களே வெற்றி வார்த்தைகளைத் தந்து உத்வேகத்தையும் உற்சாகத்தையும் பெறலாம்.
சில சக்தி வாய்ந்த சொற்றொடர்களும் உள்ளன. பிரான்ஸை சேர்ந்த அறிஞரான எமிலி கூ ஆற்றல் வாய்ந்த சொற்களைத் தனக்குத் தானே கூறிக் கொள்வதால் ஏற்படும் நல்ல விளைவுகளை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.
நான்சி என்னுமிடத்தில் அவர் நடத்திய வகுப்புகளில் வருடத்திற்கு 15000 பேர் பங்கு கொண்டனர். வருடத்திற்கு சுமார் 30000 நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் செய்தார்.
தன்னுடைய நீண்ட அறிவியல் வாழ்க்கையில் அவர் தந்த மந்திரச் சொற்களை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் ஆர்டன் என்பவர் மொழிபெயர்த்தார்.
அந்தச் சொற்கள்:- "Day by Day in every way I am getting better and better"
தமிழில் இதை- "ஒவ்வொரு நாளும் எல்லாவிதத்திலும் நான் முன்னேறி வருகிறேன்" என்று சொல்லலாம்.
தினமும் காலையும் மாலையும் நல்ல அமைதியான மன நிலையில் இருபது முறைகள் மனதிற்குள் சொல்லி வந்தால் முன்னேற்றம் தானே ஏற்படும்.
இதற்கான காரணத்தை பிரபல அறிஞர் வால்டோன் கூற்றில் காணலாம். அவர், "நம்மைக் கலந்து ஆலோசிக்காமலேயே நமக்குள் ஒரு சக்தி வேலை செய்கிறது" (There is a power that works within us without consulting us) என்று கூறினார்.
திருப்பு வார்த்தைகளைப் பிடிப்பதன் மூலம் வாழ்க்கை ஒரு திருப்பத்தைச் சந்தித்து ஆக்கபூர்வமான வழியில் உங்களை இட்டுச் செல்லக்கூடும்!
Credit: Shiva Shangar