உங்களுக்குள் உங்களது மனம் அதிகக் கூச்சல் நிறைந்து இருப்பதற்கு நீங்கள் பொறுப்பல்ல என்றும் அதை எப்போதும் மற்றவர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். எனவேதான் இப்போது இருப்பதைவிட சிறந்த இன்னோர் உலகில், இப்போதைவிட சிறந்த மனைவி, இப்போதைவிட சிறந்த கணவன், இப்போதைவிட சிறந்த குழந்தைகள், இப்போது இருப்பதை விட சிறந்த வீடு, இப்போது இருப்பதை விட சிறந்த இடம் ஆகிய எல்லாமே ஒன்றாக இருந்தால்தான் உங்களால் அமைதியாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
உங்களைச் சுற்றி எல்லாமே தவறானவைகளாக இருப்பதால்தான் நீங்கள் அமைதியின்றி இருப்பதாக நீங்கள் நினைக்கும் போது எப்படி உங்களால் அமைதியாக இருக்க முடியும்.
இதுதான் நீங்கள் சிந்திக்கும் வழியாக இருக்குமானால், இதுதான் உங்கள் தர்க்க எண்ணமாக இருக்குமானால், அதன்பின்னர் நீங்கள் நினைக்கின்ற அந்த சிறந்த உலகம் ஒருபோதும் வராது. எங்கும் இதுபோன்ற உலகம்தான் இருக்கும். எங்கும் இதேபோன்ற மனைவிகளும், இதேபோன்ற கணவன்களும், இதேபோன்ற குழந்தைகளும்தான் இருப்பார்கள். எங்கோ ஓரிடத்தில் சொர்க்கம் இருக்கும் என்ற கற்பனையை உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால் உண்மையில் எங்கும் நிறைந்திருப்பது நரகம்தான். இதுபோன்ற மனநிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் எங்கு சென்றாலும் அது நரகமாகத்தான் இருக்கும். எனவே இப்படிப்பட்ட அந்த மனம்தான் நரகம். உங்களுக்குள் உங்களது மனம் அதிகக் கூச்சல் நிறைந்து இருப்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று எடுத்துக் கொண்டு அதை மாற்றும் போது நீங்கள் எங்கு இருந்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள், வாழ்வு சொர்க்கமாக மலரும்.--ஓஷோ--
Credit: ஓஷோ விழிப்புணர்வோடு கூடிய வாழ்க்கைக்கான வழிகாட்டி.