திண்டுக்கல் பிச்சை சித்தர் 07/05/2021 அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் திண்டுக்கல்லில் மார்க்கெட் அருகே உள்ள வெள்ளை விநாயகர் கோவில் அருகே காலை/மாலை இருப்பார். மதியம் எதிரே உள்ள கடைச்சந்தில் இருப்பார். இவர் பிச்சை சித்தர் என அழைக்கப்படுகிறார். 40 ஆண்டுகள் திண்டுக்கல்லில் வசிப்பதாக சொல்கிறார்கள்.
இவர் சித்தர் என்பதை நமது மூச்சின் வேகம் குறைந்து தியானம் எளிதாக நடப்பதை வைத்து உறுதி செய்யலாம். பக்தர்கள் அருகே உள்ள டீக்கடையில் மட்டை மூக்குப்பொடி, நிஜாம் பாக்கு வாங்கி கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார். போ.. போ.. என இவர் விரட்டுவது நம் பாவ வினைகளை. சிலரை அடிக்கிறார். அவரவர் வினைக்கேற்ப ஸ்பரிஷ தீட்சை, உற்று நோக்கினால் நயன தீட்சை என ஏற்றுக்கொள்ள வேண்டும். ஞானிகள், மகான்கள், சித்தர் தரிசனம் கோடி புண்ணியம். சித்தர் தரிசனம் ஞானத்தை அள்ளித் தரும் அட்சய பாத்திரம். சித்தர்கள் வழிபாடு சிறந்த வழிபாடு.