வாழ்க்கை உள் மூச்சில் ஆரம்பிக்கிறது. வெளி மூச்சில் முடிகிறது. இந்த உள் மூச்சும் வெளி மூச்சும் தொடர்ந்து இருக்கும் வரையே வாழ்க்கை. மனிதன் விடும் ஒவ்வொரு வெளி மூச்சின் போதும் அவன் தன் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறான். அதே சமயம் அவன் ஆயுளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே இருக்கிறது. இது எல்லோரது வாழ்விலும் சாதாரணமாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது. பிறந்தவர்கள் எல்லோரும் இறந்து தான் ஆக வேண்டும் என்பதை மனிதர்கள் நம்புவதால் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
பிறந்தவர்கள் எல்லோரும் இறந்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. மனிதன் தன் சுவாசத்தை முறையாக நடத்தக் கற்றுக் கொண்டால், சுவாசத்தை வெளியில் விடாமல் தன்னுள்ளேயே நடத்திக் கொண்டால் நல்ல உடல் நலத்தோடும் மன நிறைவோடும் நீண்ட காலம் வாழ முடியும் என்று சித்தர்கள் பலர் நிரூபித்துள்ளனர். இன்னும் அநேக சித்தர்கள் மரணம் இல்லா நிலையடைந்து சமாதி நிலையிலும், பலர் தங்கள் உடலையே அணுக்களாக உதிர்த்து, தேவைப்படும் போது, தேவைப்படும் இடத்தில் அந்த அணுக்களை எல்லாம் சேர்த்து மீண்டும் உருவம் பெற்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று நிரூபித்தும் காட்டியுள்ளனர்.
ஶ்ரீகுரு பாபாஜி, வடலூர் வள்ளல் ராமலிங்க அடிகளார், திருமூலர் சித்தர், கருவூரார் சித்தர், ரமண மகரிஷி, சேஷத்திரி மகான், தாயுமானவர் மற்றும் பதினெட்டு சித்தர்களும் இன்னும் எத்தனையோ யோகி களும் இப்படி வாழ்ந்து வருகிறார்கள். வாசி யோகம் தெரிந்த மனிதன், கிரியா யோகம் தெரிந்த மனிதன், பிரசாத நெறி அறிந்த மனிதன், இன்னும் இது போல் பல யோகங்களை நம்பி தொடர்ந்து செய்து வரும் சாதனையாளர்கள் இன்றும் கூட இந்த நாட்டில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
சித்த வித்தை ஸ்தாபகர் ஶ்ரீ.சிவானந்த பரமஹம்ஸர் அவர்கள் அருளிய மூச்சுப் பயிற்சியே சித்த வித்தைப் பயிற்சியாகும். அவர் வெளிப்படுத்திய நூல் சித்த வேதம். அந்த வித்தையை பயிற்சி செய்து சமாதி ஆகி வருபவர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். ஜீவ சமாதிகளில் சமாதி நிலையில் வாழ்ந்து வரும் சித்தர்கள் அனைவரும் இப்படி உயர்ந்தவர்களே. இந்த தொகுப்பு சித்த வேதம் புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு மட்டுமே. முழு பயனையும் அடைய விரும்புவோர் சித்த வேதம் புத்தகம் தவறாது படிக்க வேண்டும். சித்த வித்தைப் பயிற்சி செய்து ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். சமாதி நிலையையும் அடையலாம்.
யூட்யூபில் சித்தர்களின் ஜீவ சமாதி வீடியோக்கள் நிறைய வெளி வந்துள்ளன.
You can view the Sidhdhar's jeeva samadhi videos uploaded by muthu guhan under "muthu guhan videos" in you tube. for example
you can view the details in this videos
சித்த வித்தை சித்தர் முருகன் அய்யா
ஜீவசமாதி வெளிப்பாட்டு அதிசயம் - திருச்சியில்
SIDHDHAR MADHAVANANDHA SWAMIKAL JEEVA SAMADHI AT PAMBU KOYIL SANDHAI
SIDHDHAR KULUMIYANANDHA SAMIKAL JEEVASAMADHI, TIRUCHIRAPPALLI
இந்த தொகுப்பு உங்களது ஆயுளை நீட்டிக்கவும், சமாதி நிலை அடையவும் சரியான பாதையைக் காட்டும் ஒரு வழிகாட்டித் தூணாக அமையும் என்று நம்புகிறேன்.
குஹானந்தா என்னும் குஹன்.M