அம்மன் வழிபாட்டில் புற்று வழிபாட்டிற்கு சிறப்பிடம் உண்டு. பாம்பு புற்றை ‘புற்று மாரியம்மன்’ என்று சொல்லி வழிபடுவர்.
புற்று வழிபாட்டின் நன்மைகள்: குடும்ப நலம் பெறுக, விரைவில் திருமணம் கைகூட, குழந்தை பாக்கியம் உண்டாக, சுக பிரசவம் அமைய, மாங்கல்ய தோஷம் நீங்க, மன தைரியம் உண்டாக, கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்தால் நோய் வராமல் தடுக்கலாம். நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு மேற்க்கொண்டால் தோஷத்திலிருந்து விடுபடலாம், தொழு நோய் நீங்க, குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு மேற்கொள்ளலாம், இன்னும் ஏனைய நன்மைகள் இவ்வழிப்பாட்டில் இருக்கிறது. நாகத்துடன் இருக்கும் அம்மன் சிலையை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் வைத்து, விளக்கேற்றி இவ்வழிப்பாடு செய்வது மிகவும் சிறப்பானது.
Credit: Astro Barath Kannan