ஆயிரம் யுகங்களின் முடிவில், சுடர்மிகும் தழல்களுடன் உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. கடுமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன். அனைத்து உயிரினங்களையும் எரித்து, அண்டத்தைப் பரந்த நீர்க்கொள்ளிடமாக்கி, அந்நீரில் குழந்தையின் வடிவில் உறங்குபவன் நீயே. மாயையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.
-பிதாமகர் பீஷ்மர்
மஹா பிரளயம் உண்டாகி அண்டங்கள் எல்லாம் அழிந்து ஊழி பெரு வெள்ளத்தில் மூழ்கி இறுதியில் தான் ஒருவனே நிலைத்து இருப்பவன் என்று காட்ட ஒரு மாயை பிரளயத்தை மார்க்கண்டேய மகரிஷி காண லீலை செய்த ஓவியம். ஸ்ரீமத் பாகவதம் இதை தெளிவாக விவரிக்கும்.
Credit: KD Kambadasan