
புராண காலம் தொடங்கி இன்றைய நாள் வரையிலான அத்தனை சாம்ராஜ்யங்களின் ஆட்சியிலும், நிகழ்ந்த மர்ம நிகழ்வுகள், போர்கள், சதிகள், கொலைகள், கொடுமைகள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து உங்களுக்கு அத்திமலைத்தேவனாகத் தந்திருக்கிறேன். இந்த நாவலைத் துவங்கும்போது நான்கு பாகங்கள் என்கிற எண்ணத்துடன்தான் எழுதத் துவங்கியுள்ளேன்.
இன்னும் நீண்டு விட்டால் அது என் தவறு அல்ல. அத்திவரதன் என் மூலமாக உங்களிடம் எல்லாவற்றையும் தெரிவிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கதை பல்லவ சாம்ராஜ்யத்தை பற்றி மட்டும் பேசப்போவதில்லை. அத்திவரதருடன் உறவாடிய அத்தனை சாம்ராஜ்யங்களைப் பற்றியும் பேசப் போகிறது.
ஆக, மகதம், நந்தம், பல்லவம், சோழம், பாண்டியம், கடம்பம், கனகம், சாளுக்கியம், ஹொய்சலம், விஜயநகரம், முகலாயர், பாமினி சுல்தான்கள், மற்றும் கோல்கொண்டா நவாபுகள், உடையார்கள், ஆங்கிலேயர் என்று அனைவரைப் பற்றியும் பேசப்போகும் cocktail நாவல்தான், அத்திமலைத்தேவன்.
அத்திமலைத்தேவன் Part 1 | Part 2 | Part 3 | Part 4 | Part 5