
பொதுப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் என்ற இரண்டு வகையினுள் "உலகம் யாவையும்" என்பது முதலான பாடல்கள் தற்சிறப்புப் பாயிரம் எனப்படும். “தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும். எய்த உரைப்பது தற்சிறப்பாகும்” என்பது தற்சிறப்புப் பாயிர விளக்கம்.
தாம் மேற்கொண்ட முயற்சி இனிது நிறைவேற வேண்டும் என்று கருதுகின்ற கவிஞர் கடவுள் வாழ்த்துடன் தொடங்குதல் மரபு. வாழ்த்தும் வணக்கமும் என இருவகைப்படும் கடவுள் வாழ்த்து. இங்கே சரண் புகுவதை முடிவாக கூறுவதால் இது வணக்கத்தின்பாற்பாடப் படுவதாகிறது.