
தான் மியூசிக் டைரக்டராக வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் போராடும் நடுத்தரகுடும்பத்து பையனாக அஜீத், பல கஷ்டங்கள், குடும்ப பிரச்சினைகள் இவற்றுக்கு நடுவிலும், அண்ணன், தங்கை, அண்ணி, அப்பா, காதலி இவர்களின் பாசம் மற்றும் சப்போர்ட்டிலும், ஹீரோ ஜெயிக்கிறாரா என்பதுதான் கதை.
அஜீத் லட்சிய வேட்கை கொண்ட மனிதராக சாந்தமாக போராடும் இடங்களில் கடும் முயற்சி கொண்ட மனிதராக இப்படத்தில் நடித்திருந்தார்.
தேவா இசையும் இப்படத்துக்கு பலம் சேர்த்தது. குறிப்பாக ஏ கீச்சுக்கிளியே, ஆண்டே நூற்றாண்டே, ஓ நெஞ்சே நெஞ்சே, ஏ நிலவே உள்ளிட்ட பாடல்கள் நன்றாக இருந்தன.
படம் மெல்லிய சோகத்துடன் சென்றதால் விவேக், மணிவண்ணன் காமெடி இருந்தது. வி.எம்.சி ஹனிபா ஒரு காட்சியில் வந்தாலும் ஆணவம் பிடித்த மியூசிக் டைரக்டர் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் கதையை நான்கு தயாரிப்பாளர்கள் நிராகரித்த பிறகு இறுதியில் எஸ்.எஸ் சக்கரவர்த்தி இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து தயாரித்தாராம்.
என்னை கேட்டால் அஜீத் நடித்த சிறந்த படம் இது என சொல்வேன். பிப்ரவரி 19, 2025 முதல் இப்படம் வெளியாகி 26 வருடங்களாகிறது. இந்த படத்துக்கு இது வெள்ளிவிழா ஆண்டு