தேதி: 05-08-2022 வெள்ளிக்கிழமை
நேரம்: 10:00 AM
வரலட்சுமி திருமண மண்டபம், திருவகவுண்டனூர் பைபாஸ், சேலம்.
நாள்: ஆகஸ்ட்5, 6, 7 (வெள்ளி, சனி, ஞாயிறு)
கண்காட்சி நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.
Helpline : 9566712939
மேலும் விவரங்களுக்கு : 8610744313, 9944292020
கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:
* இந்த கண்காட்சியில் விதை முதல் விற்பனை வரை உள்ள அனைத்து உபகரணங்கள் மற்றும் பால் பண்ணை கருவிகள், தீவனங்கள், மாடித்தோட்டம் அமைத்தல், சோலார் பம்ப் செட்டுகள், சொட்டுநீர் பாசனம், இயற்கை வேளாண் உற்பத்தி பயிற்சிகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான அனைத்து கருவிகளும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன.
* இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாடு போன்றவை குறித்து கருத்தரங்கம் இடம் பெற உள்ளது.
* மேலும் இந்த விவசாய கண்காட்சியில் கால்நடை வளர்ப்பில் உள்ள தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள், பால் பண்ணை அமைக்கும் முறைக்கான விவசாய அரங்குகள் மற்றும் முன்னோடி கால்நடை வளர்ப்பவர்களின் ஆலோசனைகள் இடம் பெற உள்ளன.
* அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் விவசாய வல்லுனர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிறப்புரையாற்ற உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இதில் நெல் கண்காட்சியும் இடம் பெற உள்ளது.
* இதில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப முறை குறித்து கருத்தரங்கம் மற்றும் விவசாய அரங்குகள் இடம்பெற உள்ளன. மேலும் பால் பண்ணை அமைப்பதற்கான புதிய தொழில் நுட்பங்கள் இடம் பெற உள்ளன.
* இந்த விவசாய கண்காட்சியில் இன்னும் என்னென்ன சிறப்புகள் இடம் பெற உள்ளன என்பதையும், மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் 8610744313, 9944292020 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.
* இந்த கண்காட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயக் கருவி விற்பனை நிறுவனங்கள், விதை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!