ஒருவரது ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 6, 15, 24 நட்சத்திரங்கள் சாதக நட்சத்திரங்கள் ஆகும். மறைந்து போன உங்கள் குலதெய்வம் அறியவும், தோஷம் போக்கவும், உடல் உபாதை குணம் பெறவும் சாதக நட்சத்திரத்தில் பிறந்த மகான் அல்லது கடவுளை வணங்க அல்லது அந்த நட்சத்திர வடிவத்தை உபயோகம் செய்து நலம் பெறலாம்.
உதாரணமாக, பூராடம் என்ற நட்சத்திரத்தில் இருந்து வரும் ஆறாவது நட்சத்திரம் பூரட்டாதி. அது போல 15 வது நட்சத்திரம் புனர்பூசம், 24 வது நட்சத்திரம் விசாகம். ஒருவருக்கு தோஷம் போக்கும் நட்சத்திரம் சாதக நட்சத்திரம் ஆகும்.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர் ஒரு முருக பக்தர். முருகனின் நட்சத்திரம் விசாகம் என்று அனைவரும் அறிந்ததே. விசாகம் என்ற நட்சத்திரத்தின் அதிபதி குரு ஆகும். குரு ஆளும் மற்ற நட்சத்திரங்கள் "பூரட்டாதி" மற்றும் புனர்பூசம்.
தனது கணுக்காலில் உண்டான எலும்பு முறிவை, விசாக நட்சத்திர உருவான முருகனை பாடி வழிபட்டு, தனது கணுக்கால் எலும்பு முறிவை குணமடைய செய்தார் என்பது இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம்.
எனவே உங்கள் ஜென்ம நட்சத்திர சாதக நட்சத்திர கடவுளை அல்லது மகானை அல்லது வடிவத்தை தேர்ந்தெடுத்து வணங்கி, தோஷம், நோய் மற்றும் சாதக சூழலை அமைத்து கொள்க.
Credit: மணிகண்டன் பாரதிதாசன்