
திதிகளில் சஷ்டி திதி ஆறாவது திதியாகும். ஜோதிடத்தில் 6-ஆம் இடம் என்பது கடன், வம்பு, வழக்கு, நோய், எதிரி குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். சஷ்டி திதியில் எந்த ஒரு வழக்கு, யுத்தம், எதிரியை முறியடிக்க திட்டமிட, கடன் அடைக்க அதிலும் அந்தத் திதியில் செவ்வாய் ஓரையில் இதை பயன்படுத்தினால் கட்டாயம் கடன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
எதிரியை வெல்ல இந்த திதி மிக பயனுள்ளதாக இருக்கும் முதன் முதலாக மருந்து உண்ண சஷ்டி திதி மிக உன்னதமான அமைப்பாகும். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வருகிற சஷ்டி திதி மிக சக்தி வாய்ந்த தாகும். அதைப்போல் புதிய வேலைக்கு முயற்சி செய்ய பொருளாதாரத்தில் வெற்றியடைய சஷ்டி திதி நன்மை அளிக்கும்.