அன்பார்ந்த ஜோதிட அபிமானிகளுக்கு அன்புகலந்த வணக்கத்துடன் V.J. சிஷ்டம் என்ற இந்நூல் 40 வருட அனுபவத்தில் ஏற்பட்ட தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது மரபு ஜோதிடத்தில் இருந்து சற்று மாறுபட்டது நவாம்ஸத்தையும் ராசியையும் இணைத்து ஓ கிரகங்களும் 96 இடங்களில் வியாபகமாய் உள்ளது என்று பாவித்து நட்சத்திரத்தையும் பின்பு கிரகத்தையும் கடைசியாக பாவகத்தையும் இணைத்தோ சொல்லக் கூடியது.
முக்கியமாக பிரசன்ன ஆருடம் போலவே சற்று ஓரைகளின் துணைகொண்டு ராசிகள் கண்டு அதை மூலத்திரி கோணம் விடுதி என்று உள்ள ராசிகளுக்கு பகிர்ந்து 60 நிமிடத்தைக் கொடுத்து அதில் 9 பாதங்களுக்கு உள்ள நிமிடங்களை வியாபகம் செய்து லக்னம் கண்டபின் ஆருட ஜாதகத்தின் துணை கொண்டு வாழ்க்கை சம்பவங்களை சொல்வதுடன் எதிர்கால சம்பவங்களையும் சுமார் 60 வயதுவரை சொல்வதுடன் சம்பவங்கள் உறுதியாக நடப்பதற்கு சாட்சிகளைக் கொண்டு தீர்மானித்துச் சொல்லும் காரணத்தால் கேட்பவர்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் வகையில் உள்ளதால்தான் இதற்கு விசித்திர ஜோதிடமுறை அல்லது V.J. சிஷ்டம் என்று சொல்வார்கள்.
கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பேருக்கு பலன் சொல்லி ஆச்சரியம் - ஏற்படும் வகையில் சொன்னதனால் “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்பதால் இதைப் பலரும் கற்று ஆனந்தம் அடைவதுடன் ஒரு கண்டு பிடிக்கப்பட்ட கருத்துகள் ஏராளமாக உள்ளதால் எல்லாவகையிலும் இன்றைய ஜெனரேசனுக்கு இதைப் பயன்படுத்தி முழுமையான வெற்றி காணலாம். நேரில் பலன் சொல்லி சாட்சிகள் சொல்லி அசரவைத்த வழிமுறைகள் இருக்கின்றன. இதைக் கற்று பயன் அடைந்து ஒவ்வொரு ஜோதிடரும் விற்பன்னர் ஆவதற்கு எனக்கு மனதார ஆசை. எல்லாம் வல்ல இறைவன் எனது ஆசையை நிறைவேற்ற அருள்புரிய வேண்டுகிறேன்.