நம் அனைவருக்கும் தெரியும் இந்திரனின் ஆயுதம் வஜ்ராயுதம். ஆனால் அவனின் இன்னொரு ஆயுதம் பற்றிய பதிவே இதுவாகும். ஜ்யேஷ்டா எனும் கேட்டை நட்சத்திரத்தில் உதித்தவர் இந்திரன். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையும் இவனே ஆகும். புராணங்களின் இந்திரனுக்கு வஜ்ராயுதம் கூறப்பட்டாலும் அவனின் இன்னொரு ஆயுதம் பாறைகளை உடைக்கும் சுத்தியல் ஆகும்.
தனது ஆயுதத்தால் மூல நட்சத்திர வடிவான இடியை வானத்தில் உருவாக்கி, அதன் மூலம் மழை வரவைப்பதால் இந்திரனுக்கு மழை வரவழைக்கும் கடவுள் என்ற பெயர் இருக்கிறது. வஜ்ராயுதம் பெறும் முன் இந்திரனின் ஆயுதம் சுத்தியல் ஆகும். இந்த சுத்தியல் கொண்டே வானத்தில் இடித்து மின்னல் உருவாக்கி மழை வரவழைப்பார் என்ற கதை உண்டு.
புகழ் பெற்ற மேற்கிந்திய கதாபாத்திரமான "தார்" எனும் கதாபாத்திரம் இடியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறது. இவரையும் கேட்டைக்கான கடவுளாக எடுத்துக்கொள்ளலாம். இவரது சுத்தியல் இவருக்கு மிகப்பெரிய பலமாக அறியப்படுகிறது. தார் என்றால் சுத்தியல் என்று அடையாளத்தை புராணத்தில் நிறுவி இருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு உன் உருவான KGF திரைப்படத்தில் வரும் ராக்கி எனும் கதாநாயகன் (யாஷ்) அவர்களின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை ஆகும். இதுவரை பல திரைப்படங்கள் கர்நாடக மொழியில் யாஷ் அவர்கள் நடித்திருந்தாலும், KGF திரைப்படம் அவரை உலக புகழ் பெற வைத்தது. அந்த திரைப்படத்தில் அவரது முக்கிய ஆயுதமாக சுத்தியல் இடம்பெற்று இருப்பதை காணலாம். அந்த சுத்தியல் அவரது அடையாளமாக படம் முழுவதும் உலவருவதை காணலாம்.
இதில் இருந்து நாம் அறிவது கேட்டை நட்சத்திர வடிவம் "சுத்தியல்". கேட்டை, ஆயில்யம் மற்றும் ரேவதி நட்சத்திர நபர்களுக்கு சுத்தியல் வடிவம் பாதுகாப்பு மற்றும் பலம் தரும்.
அனுஷம், உத்திரட்டாதி மற்றும் பூசம் நட்சத்திர நபர்களுக்கு சுத்தியல் வடிவம் வளம் தரும்.
அஸ்வினி, மகம் மற்றும் மூல நட்சத்திர நபர்களுக்கு சுத்தியல் வடிவம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
ஸ்வாதி, சதயம் மற்றும் திருவாதிரை நட்சத்திர நபர்களுக்கு சுத்தியல் வடிவம் காரிய சித்தி தரும்.
அஸ்தம், திருவோணம் மற்றும் ரோஹிணி நட்சத்திர நபர்களுக்கு சுத்தியல் வடிவம் நீண்டகால சிக்கலை தீர்க்கும்.
Credit: மணிகண்டன் பாரதிதாசன்