வேத நாகரிகம் எவ்வாறு வாழ்வது என்றும், வாழ்வின் முடிவில் நமது உணர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், எதன் மீது பற்றுதலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் போதிக்கின்றது.
மீண்டும் மீண்டும் நாம் இந்த உலகில் பிறவியெடுப்பதற்கான காரணத்தின் மையத்தினை நமக்குக் காண்பிக்கின்றது, கட்டுண்ட வாழ்வின் முடிச்சுகளை நமக்குக் காட்டுகின்றது, அதிலிருந்து வெளிவரும் பாதைகளையும் தெளிவாக காட்டுகின்றது.
எனவேதான், நமது ஆசைகளையும் பேராசைகளையும் கட்டுப்படுத்தும்படி அறிவுரை வழங்குகின்றது.
நவீன விஞ்ஞானம் மனதின் ஆசைகளைத் திருப்திபடுத்திட வழி செய்கின்றது.
அதே பழக்கத்துடன் இருக்கும் இன்றைய மதபிரசாரகர்களும் கடவுள் என்பவர் மனதின் ஆசைகளைப் பூர்த்தி செய்பவர் என்று விளம்பரப்படுத்துகின்றனர்.
ஆனால் வேத நாகரிகம் உடல் சார்ந்த ஆசைகளை முதன்மைப்படுத்துவதில்லை. அதற்காக இந்த உடலினை அப்படியே விட்டுவிடுகிறோம் என்பதல்ல, இதனைக் கடவுளின் சேவையில் ஈடுபடுத்துவதே முறையான செயலாகும். புலனின்ப ஆசைகளே நமது மிகப்பெரிய விரோதி.
Credit: Bhagavad Darishanam Tamil