கிருஷ்ணரைக் காணுதல்

கிருஷ்ணரைப் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம். ஆனால் கிருஷ்ணர் உன்னைப் பார்ப்பதற்கு ஏற்றவாறு நீ நடந்து கொள்ள வேண்டும்.

சூர தாஸர் கண் பார்வையற்றவர், இருப்பினும் அவரது உண்மையான கீர்த்தனத்தில் மகிழ்ச்சியுற்று கிருஷ்ணரே அவரைக் காண வந்தார். நம்மால் பார்க்க முடிகிறதோ இல்லையோ, கிருஷ்ணர் எங்கும் வீற்றுள்ளார். எனவே, நாம் செய்ய வேண்டியதெல்லாம் நேர்மையுடன் நடந்து கொள்வதுதான்.  

கிருஷ்ணர் பசுக்களை கட்டி அரவணைத்துக் கொள்கிறார். வாயில்லா பிராணி, அதற்கென்ன தெரியும். இருப்பினும் உண்மையுடன் அவரை நெருங்கி, அவரது திருமேனியை நக்கி தனது அன்பை அது வெளிப்படுத்தியதும், உடனடியாக கிருஷ்ணர், “இங்கே வா” என அழைத்து அதனை அரவணைத்து அமுதளித்தார். 

எனவே, கிருஷ்ணர் நம்மைக் காண வேண்டும் என்று நாம் விரும்ப வேண்டுமேயன்றி, நாமே நேரடியாக அவரைக் காண வேண்டும் என்று விரும்பக் கூடாது. (ஸ்ரீல பிரபுபாத லீலாம்ருதாவிலிருந்து) 

Credit: Bhagavad Darishanam Tamil

More like this

Leave a Reply

Error message here!

Show Error message here!

Forgot your password?

Show Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close