1. சௌசீல்யம்
பெரியவன் சிறியவன் என்ற பேதம் இல்லாமல் அடியார்களுடன் இரண்டற கலக்கும் மேன்மை குணம். ராம அவதாரத்தில் வேடர்களோடும் குரங்கு களோடும் ஏழை குகனோடும் நெருங்கி பழகினார் கண்ணன் இடையர்களோடு பாராபட்சமின்றி பழகினார்.
2. வாத்சல்யம்
குற்றம் குறைகளோடு தமது அடியார்க்கள் இருந்த போதிலும் அப்படியே ஏற்று கொள்ளும் குணம். பிறந்த கன்றை பாசத்தோடு பசு நக்குவதைபோல் விபீஷணனை ஆராயமல் அப்படியே ராமன் ஏற்று கொண்டான்.
3. மார்தவம்
அடியார்கள் தன்னை விட்டு பிரிவதை பொறுத்து கொள்ள முடியாத குணம். நாமதேவர் சேத்ராடனம் செல்லும் போது கதறி அழுதான் விட்டலன்.
4. ஆர்ஜவம்
உடல் உள்ளம் வாக்கு இவைகளில் மாசு இல்லாத தன்மை.
5. சௌஹார்தம்
எப்போதும் எல்லோருக்கும் நன்மையே எண்ணும் குணம் துன்பத்தை தான் ஏற்று கொண்டு அவர்களுக்கு நன்மை செய்யும் குணம். மீரா அருந்திய விஷத்தை தான் ஏற்று கொண்டான்.
6. ஸாம்யம்
சாதி குலம் உயர்வு தாழ்வு பாராமல் தன்னை அடைந்தவரை ஏற்று கொள்ளும் குணம்.
7. காருண்யம்
இன்னார் இனியார் என் பாராமல் இரங்கும் குணம்.
8. மாதுர்யம்
எதிரியின் சிறப்பை மதித்து தன்னை கொல்ல வந்த பகைவனுக்கு இனிமையாக இருக்கும் குணம். ராம பிரான் இராவணனை இன்று போய் நாளை வா என்றான்.
9. காம்பீர்யம்
மற்றவர்கள் நினைத்து பார்க்க முடியாத படி தன்னடக்கம் காட்டி எதிர்பாராத வகையில் அருள் புரிவான். குசேலருக்கு பாத அபிஷேகம் செய்து செல்வ மழை பொழிந்தான்.
10. ஔதார்யம்
பிரதிபலன் எதையும் எதிர்பாராமல் தனது அடியார்க்கு வேண்டிய வற்றை குறைவற கொடுக்கும் குணம்.
11. ஸதைர்யம்
அடியார்களை எந்த நிலையிலும் கைவிடாத உறுதியான குணம்.
12. தைரியம்
பகைவர்கள் எத்தனை வல்லவராக இருந்தாலும் எதிர்த்து நின்று வெல்லும் குணம்.
13. ஷௌர்யம்
பகைவர்கள் எத்தனை வல்லவராக இருப்பினும் துணையின்றி அவர்கள் நடுவே புகும் குணம். துரியோதனன் சபையில் தனி ஒருவராக வந்தவர்.
14. சாதுர்யம்
பகைவனை கூட நண்பராக்கி கொள்ளும் குணம்.
15. பராக்கிரமம்
போர்களத்தில் பயமோ கோபமோ கொள்ளாமல் எதிரியை அழிக்கும் ஆற்றல்.
16. சத்ய காமம்
பேராசை இன்றி விரும்பும் அனைத்து பேறுகளையும் குறைவின்றி பெறும் குணம்.
17. சத்யசங்கல்பம்
எதை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை தடையின்றி முடிக்கும் குணம்.
18. க்ருதித்வம்
அடியார்கள் நன்மைகாக ஓய்வின்றி உழைக்கும் குணம்.
19. க்ருதக்ஞத்வம்
அடியார்கள் சிறிய நன்மை செய்தாலும் எக்காலத்திலும் மறவாத குணம்.
20. செளலப்பயம்
அடியார்க்கு அடியானாக எவரும் தம்மை எளிதாக அணுக கூடியவனாக இருக்கும் குணம்.