நாற்பதில் மலர்ந்த காதல் கதை....
கதையில் இருந்து ஒரு டீசர்
ஒரு வழியாக, அன்று வேலையினை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்.
அவளது வீடு இருந்தது சின்ன லேனில் தான்... அதற்குள் ஒரு கார் தான் ஒரு நேரத்தில் செல்ல முடியும்...
அவளது வெள்ளைக் கார் உள்ளே வந்த சமயம், அவளது முன் வீட்டின் முன்னே இன்னொரு நீல கார் நின்று இருந்தது...
அந்த நீலக் காரை எடுத்தால் தான் வெள்ளைக் காரை அவளால் எடுக்க முடியும்...
அந்த வீடு இத்தனை நாட்கள் மூடி இருந்தன...
யாரோ வாங்கி இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டாள்...
இப்போது கார் ஒன்று நின்றது...
ஹார்ன் பண்ணினாள்...
யாரும் வரவில்லை...
கடுப்பாகி விட்டது அவளுக்கு...
இன்னும் அழுத்தமா ஹோர்ன் அடித்தாள்.
வேகமாக ஒருவன் வந்தான்...
குள்ளமாக இருந்தான்...
அவள் ஜன்னலை தட்ட, அவளும் ஜன்னலை கீழிறக்க, "டோன்ட் யூ ஹாவ் சென்ஸ்" என்று திட்டினான்...
அவன் தோற்றத்துக்கும் கோபத்துக்கும் சம்பந்தமே இல்லை...
அவனுக்கு மிஞ்சிப் போனால் ஏழு வயது தான் இருக்கும்... வாய் மட்டும் எட்டு ஊருக்கு இருந்தது...
"பீ பொலைட்" என்றாள் சிவரஞ்சனி... சிறியவர்கள் இப்படி பெரியவர்கள் போல பேசுவதில் அவளுக்கு உடன்பாடு இல்லை.
அவனோ, "என்ன பொலைட்? அப்பா வந்து கார் எடுக்கும் வரைக்கும் உங்களால பொறுத்துக்க முடியாதா?" என்றான்...
'என்ன வாய் இவனுக்கு?' என்று அவள் மனதுக்குள் நினைத்தபடி, "கொஞ்சம் தள்ளுங்க சார்" என்று சொல்ல, அவனும் தள்ளி நிற்க, காரில் இருந்து இறங்கிக் கொண்டவளோ, அவன் உயரத்துக்கு குனிந்து, "உங்க அப்பா எங்க சார்?" என்று கேட்டாள்.
"பாத்ரூமுக்குள்ள டாய்லெட் போயிட்டு இருக்கார்... அதுக்கு கூட நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா? உங்கள போல நெய்பர்ஸ் இருந்தா ஒரு கக்கூசுக்கு கூட நிம்மதியா போக முடியாது போல" என்று சொன்னான்.
'எங்கே வந்து மாட்டிக்கிட்டோம்' என்கின்ற நிலை தான் அவளுக்கு...
'வாண்டு போல இருந்துட்டு என்ன பேச்சு பேசுறான்? இவன் அப்பா கிட்ட தான் கம்ப்லைன் பண்ணனும்' என்று நினைத்துக் கொண்டே இருக்க, "டேய் ஸ்ரீமத் என்னடா பண்ணுற?" என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தான் அவன் அப்பா...
அந்த குரலை கேட்டதுமே சிவரஞ்சனியின் விழிகள் அதிர்ந்து விரிந்தன...
"அப்பா, நாக்கை புடுங்குற போல நாலு கேள்வி கேட்டுட்டு இருக்கேன்" என்று ஸ்ரீமத் சொல்ல, "எங்க போனாலும் வம்பு பண்ண வேண்டியது" என்று திட்டிக் கொண்டே வெளியே வந்தது என்னவோ குமரன் தான்...
அவனுக்கு சிவரஞ்சனியை பார்த்ததும் அதிர்ச்சி...
ஒரு கணம் அவன் புருவம் ஏறி இறங்க, ஸ்ரீமத்தோ, "அப்பா நீங்க டாய்லெட் போயிட்டு வாங்க, நான் இவங்கள பார்த்துக்கிறேன்" என்றான் சிவரஞ்சனியை முறைத்துக் கொண்டே, எட்டி அவன் வாயை மூடிய குமரனோ, "கொஞ்சம் சும்மா இருடா" என்று சொல்லி விட்டு சிவரஞ்சனியை பார்த்தவன் வலுக்கட்டாயமாக சிரித்தபடி, "சாரி, ஏதாவது தப்பா பேசிட்டானா?" கேட்டான்.
அவனை வெறித்துப் பார்த்த சிவரஞ்சனியோ, "ஆஹ் ரொம்ப மரியாதையா பேசிட்டான்" என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறிக் கொள்ள, அவள் சொன்ன தோரணையிலேயே குமரனுக்கு புரிந்து விட்டது...
மகனை குனிந்து பார்க்க, "அப்பா நான் எதுவும் பண்ணல" என்றான் அவன் விழிகளை உருட்டி.