யச்செள நி:ஸ்ருத ஸரித்ப்ரவரோதகேன
தீர்த்தேன மூர்த்ன்யதிக்ருதேன சிவ:சிவோ அ(பூத்)
த்யாதுர்மன:சமலசைல நிஸ்ருஷ்ட
வஜ்ரம் த்யாயேச்சிரம் பகவத் சரணாரவிந்தம்
பொருள்: ஹரியின் திருவடியை கழுவியதாலேயே நதிகளில் கங்கை சிறந்தவள் ஆகிறாள். அந்த கழுவிய புனித நீரை சிவபெருமான் தன் தலை மீது தரிப்பதாலேயே மங்களமே உருவான அவர் மேலும் மேலும் மங்களத்தை அடைகிறார். எவர் ஹரியின் திருவடியை தியானம் செய்கிறார்களோ, அவர்களின் பாவம் என்னும் மலை மீது இந்திரனின் வஜ்ராயுதம் புகுந்து நொறுக்குவது போல் சிதறு சிதறாகும். ஆகவே ஹரியின் சரணங்களை எப்போதும் தியானம் செய்.
நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
Credit: Vittal Saravanan