கணத்துக்கு கணம் வாழுங்கள்.
மூன்று வாரங்களுக்கு நீ எதைச் செய்தாலும் முழுமையாகச் செய். அன்போடு, மகிழ்ச்சியோடு செய். நீ தேநீர் பருகினால் அதை அளவுக்கு அதிகமாக இரசிப்பது முட்டாள்தனமாகத் தோன்றும். சாதாரண தேநீர். ஆனால், இந்த தேநீர் மிகவும் அழகானதாக மாற முடியும். அது ஒரு அற்புதமான அனுபவமாக மாற முடியும். நீ அதை மிகுந்த தெய்வீக உணர்வோடு ரசிக்க முடியும். அதை ஒரு விழாவாக்கிவிடு.
தேநீர் தயார் செய். பாத்திரம் கொதிப்பதையும் அதன் இசையையும் கேள். பின்னர் தேநீரை ஊற்று. அந்த சுகந்த நறுமணத்தை நுகர். பின்னர் தேநீரைப் பருகி மகிழ். இறந்து போன மனிதர்கள் தேநீர் அருந்த முடியாது. உயிரோடு இருப்பவர்களால் மட்டுமே முடியும். நீ இந்த நிமிடத்தில் உயிரோடு இருக்கிறாய். இந்தக் கணம் நீ தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறாய். அதற்காக நன்றியுணர்வு கொள். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாதே. அடுத்த கணம் தானே தன்னைப் பார்த்துக்கொள்ளும்.