வாசியோக இரகசியம்
உண்மையான வாசியோகம் செய்து வருகையில் மூச்சு ஒடுங்கும், பன்னிரண்டு அங்குலம் வெளிவரும் மூச்சானது
ஒரு அங்குலம் குறைந்தால்: உலக ஆசை போகும்
இரண்டங்குலம் குறைந்தால்: மனம் அறிவுடன் கலந்து ஞானமுண்டாம்
மூன்றங்குலம் குறைந்தால்: விவேகமுண்டாம்
நான்கங்குலம் குறைந்தால்: தூரத்தில் நடப்பவை அனைத்தும் தெரியும்
ஐந்தங்குலம் குறைந்தால்: முக்காலமும் உணரும் வல்லமை உண்டாம்
ஆறங்குலம் குறைந்தால்: ஆகாயத்திலுள்ளவை அனைத்தையும் கண்டுணர்வான்
ஏழங்குலம் குறைந்தால்: உடல் காயசித்தியாகும்
எட்டங்குலம் குறைந்தால்: அணிமா சித்துண்டாகும்
ஒன்பதங்குலம் குறைந்தால்: நவகண்டங்களில் சஞ்சரிக்கும் வல்லமை உண்டாகும்
பத்தங்குலம் குறைந்தால்: கூடுவிட்டு கூடுபாயும் வல்லமை உண்டாகும்
பதினொரு அங்குலம் குறைந்தால்: ஆத்மஞானம் உண்டாகும்
பன்னிரண்டங்குலம் அடங்கும் சுவாசமது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருப்பதால் அந்த பரமயோகி உணவு நீரின்றி நெடுங்காலம் மரணமற்று வாழ்ந்திருப்பான்.
வாசி என்பது காலக் கணக்கோடு, நெறிப்படுத்திய சுவாசம், இந்த நெறிபடுத்திய சுவாசத்தை பயன் படுத்தி. குண்டலி என்னும் சக்தியை உருவாக்கி அதை வாலையாக ஒளிர செய்வது. இந்த வலை என்ற ஒளி தான் பூரணம் என்ற இறைவன் இந்த வாலை எல்லையற்ற சக்தி கொடுக்கும். இந்த சக்திகள் சித்தி எனப்படும். சித்திகள் ௬௪ இருந்தாலும் ௮சித்திகள் அஷ்டமா சித்திகள் எனப்படும். அமிர்தம் என்ற சாக சுரப்பை வாலைகொடுக்கும். இதுவே உடலை அழியாமல் காக்கும். வாசி யோகா சிறப்பு.
இனி யோகம் பற்றி விரிவாக காண்போம். இவை அனைத்தும் சித்தர்களின் ஓலைச்சுவட்டில் இருந்து கிடைத்த சான்று தொடர்ந்து பார்ப்போம்.