- வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்.
- பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.
- உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.
- கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்.
- கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்.
- சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.
- கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.
- சிம்மாசனத்தில் அமரமாட்டார்.
- ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.
- தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்..
- அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.
- உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்.
- கை நீட்டி பேசமாட்டார்.
- எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்.
- எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்.
- தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்.
- சத்தம் போட்டு பேசமாட்டார்.
- சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்.
- ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.
- உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்.
- புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.
- மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.
- பணத்தை கையிலே தொடவே மாட்டார்.
- தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.
- உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.
- எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.
- வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்.
- ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.
- உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.
- ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..
- தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.
- கடவுளைத்தேடி காடு, மலை, குகை, குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.
- கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர்.
- அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.
- தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.
- தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.
- அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.
- மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..
- எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.
- ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.
- உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.
- பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .
- எவரையும் தொடமாட்டார், தொட்டு பேசவும் மாட்டார்.
- உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.
- உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்.
- நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்.
- கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.
- ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.
- ஒளி வழிப்பாட்டிற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்.
- தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்.
- சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.
- மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.
- உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்.
- ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.
- உலக மக்களுக்காக உண்மை நூலான திருஅருட்பா வைத் தந்தவர்.
- மரணம் என்பது இயற்கையானது அல்ல, செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.
- மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.
- இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்.
- மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.
- அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.
- தன் பெயருக்கு முன் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்து போடுவார்.
- இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்
- அவர் பெருமையை சொல்லி மாளாது.