நினைத்த காரியம் கைகூட வேண்டுமா

தொடர் தோல்வியை சந்திப்பவரா நீங்கள்?

அப்படி என்றால்? வெற்றிலை தீபம் ஏற்றுங்கள்!

மனிதனாய் பிறந்த ஜீவன், எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஏனென்றால் வெற்றி பெற்றவர்களையே இவ்வுலகம் போற்றும். தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்கள் ஒருமுறையாவது வெற்றியை சந்திக்கமாட்டோமா என்று ஏங்குபவர்கள் வெற்றிலை காம்பில் தீபம் ஏற்றினால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். 

வெற்றிலை காம்பில் பார்வதிதேவியும், வெற்றிலையின் நுனியில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாய் ஐதீகம். சேதாரமில்லாத புத்தம்புது வெற்றிலையினை 6 எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாய் நுனிப்பகுதி சேதாரமில்லாமல் இருக்கவேண்டும். நுனியில்லாத வெற்றிலையை பூஜைக்கு எப்போதுமே பயன்படுத்தகூடாது. வெற்றிலையிலிருந்து காம்பினை கிள்ளி எடுத்துக்கொள்ளவேண்டும். 

காம்பில்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ 6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து(மேலே படத்தில் காட்டியுள்ளது போல்), வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு வைக்கவும். அடுத்து கிள்ளி வைத்திருக்கும் 6 காம்புகளையும் நல்லெண்ணெய்க்குள் போட்டு(படத்தை பார்க்கவும்), தீபத்தை ஏற்ற வேண்டும். 

ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலையில் தீபத்தின் சூடுபட்டு, வெற்றிலையிலிருந்து நறுமணம் வீசும். இந்த நறுமணத்தை நன்றாக உள்ளிழுத்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும்.  

உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், விரைவில் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும். நினைத்தது ஈடேறும். காரணம் வெற்றிலையில் வீற்றிருக்கும் முப்பெரும்பெரும் தேவிகளின் அருட்பார்வை கிட்டும். நம் நிலை மாறும். 

நம்புங்கள். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்.

More like this

Leave a Reply

Error message here!

Show Error message here!

Forgot your password?

Show Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

Close