
நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்.
ஐந்து விதமான உலோகத்தினை சரியான அளவில் கலந்து செய்யப்படும் ஐம்பொன்சிலைகள் இதில் தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, ஈயம் போன்ற உலோகங்கள் சரியான அளவில் கலந்து செய்யப்படும்.
இந்த சிலைகள் பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்.
காரணம் நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது,மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும்.
இந்த உலோக சத்துக்கள் தான் நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை,நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது.
அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது.
இதில் தங்கம் குருவின் சக்தியையும்,
வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,
செம்பு சூரியனின் சக்தியையும்,
இரும்பு சனியின் சக்தியையும்,
ஈயம் கேதுவின் சக்தியையும்
இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ , காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும் ,உடலினை குளிர்ச்சி படுத்தும்.
ராஜ உறுப்புகளான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும், தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும். இதன் அறிவியல் விளக்கத்தை காண்போம்.
மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி, நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது. இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.
இந்த பகுதிகளில் ஐம்பொன்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும்.
இரண்டாவது விடயம் என்னவெனில்,
எமக்கு என்ன நடக்க போகின்றது என அறிந்து நம்மை பக்குவப்படுத்தும் நிலை வரும். மற்றும் “எனக்கு ஏன் இப்படி நடந்தது” என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்.
இன்னும் ஒரு விடயம் உள்ளது.
பரிகாரம் எந்தளவுக்கு வேலைசெய்கிறது என்பதனை நிர்ணயிக்க முடியாது. ஆனால் மனம் ஆன்மீக வழி சென்று, பரம்பொருளான இறையருளை பெற்று தரும். அவர் கருணை, அன்பு கிடைக்கும். ஜாதகம் உங்கள் நிலையறிந்து உங்களை எவ்வழியிலும் நல்வழிப்படுத்தவே ஜோதிடர்கள் வாயிலாக உங்களுக்கு உரைக்கப்படுகிறது.
உங்கள் கிரகங்கள் என்ன சொல்கிறது என பார்த்து அதுசார்ந்த முற்பிறப்பு தவறால் இந்த பிறப்பில் தண்டனை அனுபவிக்கின்றீர்கள் என உணர்ந்து செய்த தவறிற்கு பரிகாரம் செய்வதும் இனி நல்ல பாதையில் செல்வது உங்கள் கையிலே. இதுவே உங்களை இனி காக்கும். இல்லாவிட்டால் இறைவன் மீதான அதீத அன்பினால் அவரால் உங்கள் பாவங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
அவ்வளவு தூயபக்தி இக்கலியில் ஏற்படுவது மிகமிக அரிது. ஏற்பட்டாலும் இறைவனின் சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆகவே இயலுமானவரை தர்மவழி சென்று அகத்தில் இறைவனை இருத்தி உத்தமர்களாக வாழ இந்த ஜோதிட கலையினை உபயோகப்படுத்துவீர்களாக.