எந்த ராசி எந்த லக்னம் என்றாலும் குரு முற்றிலும் வலுவிழந்தால் அந்த ஜாதகர் புண்ணிய பலனை சேர்க்கவில்லை என்றே பொருள்.
குரு ஜாதகத்தில் 2/5/9 போன்ற அதி முக்கியமான வீடுகளுக்கு காரகாதிபதி. காரகாதிபதி என்றால் அந்த வீட்டின் காரக பலனை வழங்கும் பொறுப்பை கொண்டவர்.
2/5/9 காரகங்கள் சில: தனம்/குடும்பம், பூர்வீகம்/மந்திர சித்தி, சேமிப்பு ஆன்மீக பயணங்கள் மற்றும் வழிபாடுகள். இப்படி இந்த மூன்று வீடுகளும் அதி முக்கியமான காரகங்களை கொண்ட வீடுகள். குரு வலுவிழந்து அந்த வீட்டின் அதிபதி வலுபெற்றால் குருவால் ஏற்படும் இன்னல்களை அந்த ஜாதகர் எதிர்கொள்ள இயலும். வீட்டின் அதிபதியும் வலுவிழந்தால் ஜாதகர் இந்த வீட்டின் பலன்களை பெற வாழ்க்கை முழுவதும் போராட வேண்டும். இதில் வலு பெறுவது/வலுவிழப்பது என்ன நிலையில், அதன் தாக்கம் என்ன, எவ்வாறு எதிர்கொள்ளலாம் தொடந்து படியுங்கள் பார்க்கலாம்.
குரு ஜனன ஜாதகத்தில் சனி/ராகு/கேது தொடர்பை பெற்றால் வலுவிழந்தவராவார். இதில் இந்த மூவரும் குருவுடன் ஒரே ராசியில் இணையும் போதே குரு தன் வலுவை முழுதாக இழப்பார். குரு ஜாதகத்தில் 3/6/8/12 ல் ஆட்சி நிலையை பெறாமல் நின்றால் வலுவிழப்பார். இதிலும் குருவுக்கு அந்த வீடு பகை/நீச்ச வீடுகளாக இருக்கும் போது தான் முழு வலுவை இழப்பார், இதுவே சமம்/நட்பு வீடு என்றால் முழு வலுவை இழக்க மாட்டார். மேலும் மறைவில் ஆட்சி/உச்சம் பெற்ற குரு வழுவிழந்தவராக மாட்டார்.
குரு ஒருவரது ஜாதகத்தில் வலுவிழந்தால் மேலே கூறிய மூன்று பாவத்தில் தாக்கம் அதிகம் ஏற்படுத்துவார் என்றேன் அல்லவா, இந்த தாக்கம் எவ்வாறு இருக்கும் என்றால் ஜாதகருக்கு ஆன்மீகம்/சாஸ்திரம்/சம்பிரதாயம் இவைகளை நோக்கி ஈர்க்கபடுவார். அதே நேரத்தில் அதனை அவர் பின்பற்றும் போது கடுமையான சோதனைகளை 2/5/9 ம் பாவங்களில் எதிர்கொள்வார் (விதிவிலக்கு: இந்த வீடுகளின் அதிபதி வலுப்பெற்று இருந்தால் தாக்கம் குறையும், அதாவது எதிர்கொள்ளும் வலிமையை பெருவார்) இவர்களால் ஆன்மீகம்/சாஸ்திரம்/சம்பிரதாயம் இவைகளை விடவும் முடியாமல் முழுதாக ஏற்று கொண்டு செயல்படவும் இயலாமல் போகும்.
இவ்வாறான எதிர்மறை ஆற்றலை எதிரக்கொள்பவர் குருவின் செயல்பாட்டில் விழிப்புணர்வு பெற வேண்டும், குருவின் காரகங்களில் 'தாமரை இலை நீர்' போல செயல்பட அல்லது செயல்படுத்த வேண்டும்.
உதாரணமாக: குரு 8 ல் மறைந்து மேஷ லக்னம் விருச்சிக ராசி என்றாகி 8 ம் 6 ம் பரிவர்தனை பெற்று அங்கே சுக்கிரனும் மறைந்து நின்றால், மேலே நான் கூறிய எதிர்மறை பலன்களை ஜாதகர் முழுதாக அனுபவிப்பார், இவர் அதிகமாக குருவின் காரகங்களை செயல்படுத்தினால் 2/5/9 ல் அதிக பாதிப்புகள் ஏற்படும், அதனை எதிர்கொள்ள இயலாமல் ஜாதகர் குருவை வெறுப்பார் (குருவின் காரகங்களில் ஆன்மீகம்/சாஸ்திரம் போன்ற காரகங்களில் விரக்தி/வெறுப்பு ஏற்படும்) இதனால் அதில் இருந்து விலகி போக எத்தனிக்கும் போது, குரு மீண்டும் தனம்/சேமிப்பு போன்ற காரகங்களில் தன் எதிர்மறை காரகங்களை வழங்க ஆரம்பிப்பார், இதனால் திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதை போல ஜாதகர் மீண்டும் ஆன்மீகம் வழிபாடு போன்றவற்றை செயல்படுத்துவார். இதனால் அதில் இருந்து மீளுவார், மீண்ட ஜாதகர் அதில் தீவிரமாக இறங்கும் போது மீண்டும் குரு தன் எதிர்மறை பலன்களை வழங்க ஆரம்பிப்பார், திரும்பவும் முதலில் ஆரம்பித்த இடத்தில் ஜாதகர் வந்து நிர்ப்பார், இதனை எதிர்கொள்ள ஜாதகர் குருவின் காரகங்களில் 'தாமரை இலை நீர்' போல முழுதாக ஒதுக்காமல் அதற்காக முழுதாக முழுகாமல் செயல்பட வேண்டும், அப்போது தான் குரு தரும் கர்ம பலனை எதிர்கொள்ள இயலும், ஆனால் இந்த புரிதல் ஏற்படுவதற்க்கே ஒரு கொடுப்பனை வேண்டும் என்பதே நிதர்சனம், பெரும்பாலும் குரு வலு குறைந்து 2/5/9 ம் அதிபதி அல்லது லகினாதிபதி/ராசியாதிபதி வலுத்தவர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட முயற்சிப்பார்கள்..!
குரு தரும் எதிர்மறை பலன் முழு வாழ்க்கைக்கு உண்டானது எந்த தசை என்றாலும் இது செயல்படவே செய்யும். ஏனெனில் இவர் பூர்வபுண்ணியம்/பாக்கியாதிபதி ஆவார். ஆனால் லக்ன/ராசிக்கு சுபர் என்றாகி வலுப்பெற்று தசை நடக்கும் போது தாக்கம் குறைவாக இருக்கும். அதே போல லக்ன/ராசிக்கு சுபர் வலுத்து 2/5/9 ம் வீட்டில் தொடர்பு பெற்றால் தாக்கத்தை எதிர்கொள்ளும் வலிமையை பெருவார், முக்கியமாக சனி/ராகு/கேது தசைகளில் குருவின் ஆசி மிக அவசியம் இல்லை என்றால் ஜாதகரின் பாடு திண்டாட்டமே.
Credit: ஜோதிட சிந்தனைகள்