லக்னமே ஆத்மா, ஜாதகத்தில் லக்னத்தில் நின்ற கிரகம்/லக்னாதிபதி நின்ற வீடு அதன் நிலையில், அக்கிரகம் எந்த வீட்டின் அதிபதியோ, எந்த பாவத்தின் காரகாதிபதியோ அதன் காரகங்களை பெறவும்/இழக்கவுமே பிறவி.
லக்னம் வலுவானால் ஜாதகருக்கு கர்மத்தை எதிர்கொள்ளும் திடம் உண்டு என்று பொருள்.
லக்னாதிபதியே ஆத்மா என்பதனால் தான் யார் கைவிட்டாலும் லக்னாதிபதி கைவிட மாட்டார் என்று கூறுகிறார்கள்..!
ஒருவர் ஜாதகத்தில் லக்ன வலுவை கணிக்கும் போது லக்னத்தை தொடர்பு கொள்ளும் சுப/அசுபரின் வலு, லக்னாதிபதியின் நிலை மற்றும் ஷட் வலு, லக்னாதிபதியை தொடர்பு கொண்ட சுப/அசுபர், சூரியனின் நிலை/வலு, போன்ற அனைத்தையும் ஆய்வு செய்தே முடிவு செய்ய வேண்டும்.
லக்னாதிபதி பகை, நீச்சம், கிரகண தோஷம் போன்ற நிலையில் நின்றால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும் என்று கணிக்க வேண்டும், லக்னாதிபதி 6/8ல் நின்றாலும் அது நட்பு வீடானால் எதிர்மறை தாக்கம் குறைவே, ஆட்சி/உச்ச வீடானால் தீவினை கர்மம் என்று பொருள்.
லக்னம் வலுவிழந்தால் அதனை தெய்வ வழிபாட்டின் வழியே எதிர்கொள்ளும் (தங்கிக்கொள்ளும்) வலிமையை பெறலாமே தவிர வலுப்படுத்த எந்த பரிகாரத்தாலும் முடியாது, ஏனெனில் லக்னம் வலுவிழப்பது அந்த ஆத்மாவின் கர்மவினை பயனால்.