மாம்சக்கண்கள் இரண்டு மனக்கண் ஒன்று.
இவைகள் செய்யும் வேலைகள், சிறுகுழந்தை முதல் பெரியோர்கள் வரையில் அவரவர்களின் ஜாண்களால் அவரவர்களின் சரீரத்தை அளந்து பார்த்தால் எண்ஜாண்கள் சரீரமேயிருக்கும்.
இந்த எண்ஜாண் சரீரத்திற்கும் சிரசே பிரதானம். இந்த சிரசில் எது பிரதானமென்றால், இரண்டு கண்கள், இந்த இரண்டு கண்களிலும் எது பிரதானமென்றால், கண்களில் இருக்கும் கருவிழிகள்.
இதிலும் பிரதானம் எதுவென்றால், கருவிழிகளின் மத்தியில் உள்ள கருவி அக்கருவியின் மத்தியில் ரந்திர மொன்றுண்டு. அந்த ரந்திரம்தான் கண்களுக்கு முக்கியமான வஸ்து.