ஸீராம நாமாகில மந்த்ர பீஜம்
ஸஞ்ஜீவனம் சேத்ஹ்ருதயே ப்ரவிஷ்டம்
ஹாலஹலம் வா ப்ரலயானலம்வா
ம்ருத்யோ முகம் வா விஸதாம் குதோபி!!
பொருள்:
சிவபிரான் கூறுகிறார்,
ஸீராம நாமம் எல்லா மந்திரங்களின் பீஜம் ஆகும் சஞ்சீவனி வேராகும். யாருடைய இருதயத்தில் ராம நாமம் ஸ்மரணம் உள்ளதோ, அவன் ஆலகால விஷத்தையே குடிக்கட்டும் அல்லது பிரளய அக்னி ஜீவாலையில் கிடக்கட்டும், எமனின் வாய்க்குள் நுழையட்டும். அவனுக்கு பயம் ஏது? எங்கிருந்து வரும்? அவனை எதுவும் கெடுக்க முடியாது.
நாமமே பலம் நாமமே சாதனம்