கங்காவதரணம், நடராஜ பெருமானின் 108வது தாண்டவம். இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.இந்த அற்புதமான சிற்பம் நுட்பமான யோகக்கலையை விளக்கும் கடினமான தாண்டவம். ஒரு கையில் தீ, ஒரு கையில் உடுக்கை, ஒரு கை அபயமாகவும் மற்றொன்றை மல்லாந்து கிடக்கும் முயலகன் மார்பில் ஊன்றி தலைகீழாக இரண்டு திருவடிகளையும் இடுப்பிற்கு மேல் உயர்த்தி ஆடுகின்ற அற்புத நடனமாகும்.