அவரைப் புரிந்து கொள்ள தலைசிறந்த அறிவாளிகளாலும் இயலாது. இருப்பினும் அவரைப் புரிந்து கொள்ளும் வேட்கை மட்டும் தொடர்ந்து கொண்டு வருகிறது.
அவர் அவதாரமா? அல்லது அன்பின் மகோன்னத வடிவமா?
அவர் இஷ்ட தெய்வமா? அல்லது குறைகள் நிறைந்த நம் பக்தியைப் பருக வந்த தெய்வீகமா?
அவர் ஒரு ஆன்மீக குருவா? அல்லது நம்முள் உறைந்திருக்கும் தெய்வீகத்தின் வெளிப்பாடா?
நாம் அவரது 96வது பிறந்த நாள் மஹோத்சவத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அவரது அளப்பரிய மகிமையினை, அவர் பால் ஈர்க்கப்பட்ட சில பக்தர்களின் அற்புதமான அனுபவங்களின் வாயிலாகவும், அவரது கூற்றின் மூலமாகவும் அறிந்து கொள்வோம்.
ஸ்ரீ சத்ய சாயி ஊடக மையத்தின் இந்த எளிய காணிக்கையை பகவானின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம். "சாயி யார்?"